வாஷிங்டன்: அதிபர் தேர்தல் ஹாக்கிங் பின்னணியில் ரஷ்யா இருந்திருக்கலாம் என டிரம்ப் ஒப்புக்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது தேர்தல் வெற்றிக்கு ரஷியா உதவியதாகவும், ஓட்டு எந்திரங்களை ஹேக்கிங் முறையில் ரஷியா தன்வசப்படுத்தி விட்டதாக கூறப்பட்டது.


இந்நிலையில் முதன் முதலாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவை நிர்ணயிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹாக்கிங் பின்னணியில் ரஷ்யா இருந்திருக்கலாம் என டிரம்ப் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.


என்னை பற்றி தவறாக வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் செய்திகள் முற்றிலும் போலியானது. எனக்கு ரஷ்யாவுடன் கடனோ, நிலுவை தொகையோ என எந்த வித தொடர்பும் இல்லை. ரஷ்ய அதிபர் புதினுக்கு என் மீது நல்ல அபிமானம் ஏற்பட்டால் அது எனது பெரிய சொத்தாக கருதுவேன்.


மேலும் எனது தொழில்களை எனது இரண்டு மகன்களும் கவனித்து வருகின்றனர். அதுகுறித்து எந்த கருத்துக்களும் அவர்கள் என்னிடம் பகிரப்போவதில்லை. நான் எனது தொழிலில் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிவிட்டேன். என கூறினார்.