Russia Ukraine News: ஆயுதங்களைக் கீழே போட வலியுறுத்தி ஆயுதமேந்தும் ரஷ்யா
ஆயுதங்களை கைவிட வேண்டும் என உக்ரைனை வலியுறுத்தும் ரஷ்யா, ஆயுதமேந்தி போட் தொடுத்து, சர்வதேச அளவில் அச்சங்களை அதிகரித்துள்ளது...
ஐ.நா அவசரகால பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர், உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் இராணுவ நடவடிக்கையானது, கிய்வில் அதிகாரத்தில் உள்ள "அரசு ஆட்சியை" குறிவைத்ததிருப்பதாக கூறினார்.
"உக்ரேனிய மக்களுக்கு எதிராக நாங்கள் ஆக்ரோஷமாக செயல்படவில்லை, ஆனால் கிய்வில் அதிகாரத்தில் இருக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று ரஷ்ய தூதர் கூறினார்.
முன்னதாக, உக்ரைன் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும், டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவித்ததை அடுத்து போர் மேகம் கனிந்து போராக மாறிவிட்டது.
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: 'சிறப்பு நடவடிக்கை' எடுக்கப்படுவதாக புடின் அறிவிப்பு
இரு தரப்பினரும் நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. இந்த நிலையில், லுகான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவின் 5 போர் விமானங்களையும் 1 ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக ரியாட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் அளித்ததாக ஏ.என்.ஐ டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் போது, உலகம் உடனடியாக செயல்பட வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரஷ்யா மீது பேரழிவு மற்றும் தடைகளை அறிவித்து, அனைத்து விதங்களிலும், ரஷ்யாவை முழுமையாக தனிமைப்படுத்துங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆயுதங்கள், உபகரணங்கள். நிதி மற்றும் மனிதாபிமான உதவி என அனைத்தையும் தடை செய்யவேண்டும் என்றும், ஐரோப்பா மற்றும் உலகின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது என்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்த நிலையில் ராணுவ படைகள் உக்ரைன் மீது குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படையெடுப்பு உலகம் முழுவதும் ஒரு புதிய "அகதி நெருக்கடியை" உருவாக்கும் என்று பல்வேறு நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உக்ரைன் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் போது, ஐந்து மில்லியன் மக்கள் போரினால் இடம்பெயரலாம் என அமெரிக்கா எச்சரித்தது,
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த பல நாட்களாகப் போர்ப்பதற்றம் நீடித்துவந்தது. எந்நேரம் வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது போர் தொடுக்கத் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | US vs Russia: ரஷ்யா - உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR