மாந்தரீகர் கட்டுபாட்டில் புடின்; மான் இரத்தத்தில் குளியில்... ரஷ்ய பத்திரிகையாளரின் பகீர் தகவல்!
ரஷ்யா உக்ரைன் போர் 9 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், தனது அதிகாரத்தை இழக்காமல் இருக்க, நாய்கள் மற்றும் கழுகுகள் உட்பட பல விலங்குகளை புடின் பலி கொடுத்ததாக ரஷ்ய பத்திரிகையாளர் கூறுகிறார்.
உலக அளவில் பொருளாதார நீதியாகவும் பிற வகைகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ரஷ்யா உக்ரைன் போர் 9 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், சமாதானம் ஏற்படுவதற்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை. மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. சில ஊடகங்களில், அவருக்கு கடுமையான புற்று நோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிலர் அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட தீவிரமான நோய் இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. இந்நிலையில், தற்போது ரஷ்ய பத்திரிக்கையாளர் ஒருவர் விளாடிமிர் புடின் குறித்து அதிர்ச்சிகரமான கூற்றை வெளியிட்டுள்ளார்.
புடின் மாந்திரீகத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர் என்று பத்திரிகையாளர் ஒகெக் காஷினா கூறுகிறார். நாய்கள், கழுகுகள் உள்ளிட்ட பல விலங்குகளை புடின் பலி கொடுத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ரஷ்யாவில் தனது அதிகாரத்தை வலுவாக வைத்திருக்க புடின் இவற்றை எல்லாம் செய்வதாக, அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
'சைபீரியாவின் அமானுஷ்யவாதி மீதான பயம்'என்ற தலைப்பில் வெளியான அறிக்கையில், ஒகெக் காஷினா இந்த பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆனால் அவரது அதனை நிரூபிக்கும் வகையில் எந்த உறுதியான ஆதாரத்தையும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. புடின் தொடர்ந்து மான் இரத்தத்தில் குளிப்பதாகவும், சைபீரிவை சேர்ந்த ஒரு மாந்திரீகவ்வாதிக்கு புடின் பயப்படுவதாகவும் அவர் கூறுகிறார். 2019 ஆம் ஆண்டில், இந்த மாந்தரீகர் புடினின் 'பேய்' ஆன்மாவை சுத்தப்படுத்த ஒரு சடங்கு செய்ததாக கூறப்படுகிறது. எனினும் பின்னர் இந்த மாந்தரீகர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | வீங்கிய விரல்கள்... நடுங்கும் கால்கள்... புடின் உடல் நிலை குறித்த பகீர் தகவல்கள்!
ஜார்ஜி ரோகோசின் என்ற கேஜிபி ஏஜென்ட் புடினுக்கு அமானுஷ்யத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியதாக காஷி கூறுகிறார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு, அவரது அதிகாரத்திற்கு எதிராக எழுந்த குரல் விளாடிமிர் புடினை அச்சப்படுத்தியுள்ள நிலையில், அவரை மாந்தரீக உலகம் ஈர்த்துள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது. பிப்ரவரி 24 அன்று, உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் உக்ரைனின் ராணுவம், உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்த, வெடிக்காத ஆயுதங்களுடன் அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளது. வியாழன் அன்று உக்ரைனின் தலைநகர் கீவில் நடந்த மாநாட்டில், இராணுவ அதிகாரி மைகோலா டானிலியுக், எல்விவ் மற்றும் க்மெல்னிட்ஸ்கி பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட X-55 க்ரூஸ் ஏவுகணைகளின் உடைந்த பாகங்களை ஊடகங்களில் காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அணு குண்டுவீச தயாராகிறதா ரஷ்யா... அதிகரிக்கும் பதற்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ