Russia Nuclear Doctrine: போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அரசை அனுமதிக்கும் புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி கொள்கைக்கு ஒப்புதல் அளித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) கையெழுத்திட்டுள்ளார். இது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தினால் மட்டுமே அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என்பதையே ரஷ்யா அதன் அணுசக்தி கொள்கையாக வைத்திருந்தது. தற்போது இதில்தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அணு ஆயுதம் கொண்ட நாட்டின் உதவியுடன் ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும்பட்சத்தில், அந்த நாடுகளின் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும் என தற்போதைய புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி கொள்கையில் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. 


பதற்றத்தில் உலக நாடுகள்


ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அனுமதி அளித்திருந்தார். ரஷ்யா பல மாதங்களாக தனது அணுசக்தி கொள்கையில் மாற்றம் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில், அமெரிக்காவின் சமீபத்திய முடிவை அடுத்து ரஷ்ய அதிபர் புதின் அந்த கொள்கைக்கு உடனடியாக ஒப்புதல் அளித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. 


அமெரிக்கத் துணை அதிபராகும் இந்தியாவின் மருமகன்: உஷா குறித்து நெகிழும் ஜே.டி.வான்ஸ்


கடந்த 1000 நாள்களுக்கு மேலாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்காவின் ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்யாவின் மீது பயன்படுத்தும்பட்சத்தில், புதுபிக்கப்பட்ட அணுசக்தி கொள்கையின்படி ரஷ்யா அவர்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடும் என தெரிகிறது. அதுமட்டுமின்றி, இந்த புதிய கொள்கையின் கீழ் தாக்குதல் நடத்திய நாடு மீது மட்டுமின்றி, தாக்குதல் நடத்திய நட்பு நாடுகள் மீதும் அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனால், உக்ரைனை ஆதரிக்கும் மேற்குலக நாடுகள் தற்போது பதற்றத்தில் உள்ளன. அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. தற்போது அமெரிக்காவில் ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்காவில் தேர்தல் தற்போது நடந்து முடிந்துள்ள சூழலில், ரஷ்யாவின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 


அமெரிக்காவின் கேள்விக்குரிய ஆயுதங்கள், ஏவுகணைகள் ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக தாக்கும் திறன் கொண்டவை ஆகும். இதனை பயன்படுத்த உக்ரனைக்கு சமீபத்தில் அமெரிக்கா ஒப்புதல் அளித்திருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போரில், NATO நாடுகள் மற்றும் மேற்கத்திய சக்திகளின் வளர்ந்து வரும் பங்கு குறித்து ரஷ்யா கவனம் குவித்துள்ளது. இதன் விளைவாக அணுசக்தி கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. 



சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ