ஊழல் புகாரில் 11 இளவரசர்கள் கைது: சவுதி அரசு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2009ல் ஜெட்டா நகரில் வெள்ளதடுப்பு பணியில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை துவங்கிய நிலையில், முன்னாள் மற்றும் இன்னாள் அமைச்சர்கள் என 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.