டச்சு நாட்டைச் சேர்ந்த Jan Wildschut என்ற மருத்துவர், இயல்பாக குழந்தை பெற முடியாதவர்களுக்காக செயற்கை கருவூட்டல்  சிகிச்சையை கொடுத்து வந்தார். அடையாளம் தெரியாத நன்கொடையாளர்களிடமிருந்து விந்தணுக்களைப் பெறுவதாக நினைத்த பெண்களுக்கு விந்தணுக்களை கொடுத்து 17 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவர் ஜான் வைல்ட்ஷட் (Jan Wildschut) 1981 முதல் 1993 வரை  சோபியா கருவுறுதல் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றினார். அவர் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த மோசடி வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையில் செயற்கை முறையில் கருதரித்த பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


"மகளிர் மருத்துவ நிபுணரான ஜான் வைல்ட்ஷட் 17 பெண்களுக்கு தனது விந்தணுவை செலுத்தி குழந்தை பெறச் செய்திருக்கிறார், ஆனால் அது செயற்கை முறையில் கருதரித்த பெண்களுக்கோ அவர்களது குடும்பத்தினருக்கோ தெரியாது. 17 குழந்தைகள் என்பது தற்போது சட்டபூர்வமாக தெரிய வந்திருக்கும் எண்ணிக்கை. உண்மையில்  குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம்" என்று கிழக்கு டச்சு நகரமான ஸ்வோல்லிலுள்ள இசலா மருத்துவமனை (முன்பு சோபியா மருத்துவமனை என்ற பெயரில் இயங்கி வந்தது) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. "இது போன்ற நடவடிக்கைகள் தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. விவரித்தன.


விந்தணு நன்கொடையாளர்களை டச்சு மொழியில் KID என்று சொல்வார்கள்.  நன்கொடையாக பெறும் விந்தணுக்களைக் கொண்டு செயற்கை கருவுறுதல் முறையில் குழந்தை பெறும் பிரிவில் ஜான் வைல்ட்ஷட் பணிபுரிந்தார். அவர் இன்னும் பல பெண்களுக்கு தனது விந்தணுவை செலுத்தி, மேலும் அதிக குழந்தைகளுக்கு தந்தையானாரா  என்பது தெரியவில்லை என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.


மருத்துவரின் இந்த திருவிளையாடலை 2019 ஆம் ஆண்டில் தெரிந்து கொண்ட மருத்துவமனை, விந்தணு தானம் தொடர்பான பிரச்சினையில் "அதிக வெளிப்படைத்தன்மைக்கு பங்களிக்க" ("contribute to greater transparency") மருத்துவரின் குடும்பத்தினர் மற்றும் நன்கொடையாக பெற்ற விந்தணுக்களில் இருந்த பெறப்பட்ட  குழந்தைகளுடன் சேர்ந்து பகிரங்கப்படுத்த முடிவு செய்தது.


மருத்துவர் Wildschut 2009ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார். வணிக தரவுத்தளம் மருத்துவரின் மருமகன் ஒருவரின் DNAவுடன் ஒப்பிட்டு பார்த்தபோது மருத்துவர் Wildschut செய்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததாக டி ஸ்டென்டர் (De Stentor) செய்தித்தாள் தெரிவித்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நட்த்த சம்பத்தப்பட்ட அமைச்சகம் மறுத்துவிட்டது. "கருவுறுதல் சிகிச்சையை நிர்வகிக்கும் சட்டங்கள் அல்லது விதிமுறைகள் இல்லாத காலகட்டத்தில் இந்த விஷயம் நடந்தது" என்று அரசு கூறுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.


டச்சு நாட்டில் அண்மையில் வெளியான IVF எனப்படும் செயற்கை முறை கருத்தரித்தல் சிகிச்சையில் நடைபெற்ற ஊழல் இது. கடந்த ஆண்டு, ரோட்டர்டாமில் உள்ள மற்றொரு டச்சு மருத்துவர், சிகிச்சை பெறும் பெண்களுக்கு கருவூட்டும்போது தனது விந்தணுக்களை செலுத்தி குறைந்தது 49 குழந்தைகளைப் பெற்றெடுத்தார், தற்போது வெளியாகியுள்ள மற்றொரு ஊழல் அனைவரின் மனதிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.


தொடர்புடைய செய்தி: கொரோனா காலத்தில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையை கொடுக்கும் நாடு எது தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR