சாகித் அஃபிரிடி-ன் சர்ச்சை டிவிட் ‘இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்’
பாகிஸ்தான் அணி அதிரடி கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சாகித் அஃபிரிடி தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை?” என்று ட்வீட் செய்துள்ளார்.
காஷ்மீரில் தீவரவாத தாக்குதலில் ஈடுபட இருந்த 13 தீவிரவாதிகளை இந்தியப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதன் பிறகு ஷாகித் அப்ரீடி ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியே காஷ்மீர். அதனை சீர்குலைக்கும் விதமாக சாகித் அஃபிரிடி ட்வீட் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..
காஷ்மீர் விவகாரம் குறித்து ஷாகித் அஃப்ரீடி பலமுறை கருத்து தெரிவித்து கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.