பிரிட்டனில் ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு பார்ட்டிக்குப் பிறகு, கஞ்சா மற்றும் விஸ்கி குடித்துக்கொண்டிருந்தபோது, ​​​​பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவர், பாகிஸ்தானில், தூங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேக்ஃபீல்ட் கன்சர்வேடிவ் எம்.பி.யான இம்ரான் அஹ்மத் கான், ஸ்டாஃபோர்ட்ஷையரில் உள்ள ஒரு இல்லத்தில் ஜனவரி 2008 இல் 15 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இது குறித்து சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


2010 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானிய விருந்தினர் இல்லத்தில் எம்பி தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக வேறு ஒரு சாட்சி கூறியுள்ளார். நவம்பர் 2010 இல் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் நடந்த போது இம்ரான் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். 


மேலும் படிக்க | விண்வெளி பயணத்தில் கால் பதிக்கும் தனியார் நிறுவனம்; வரலாறு படைக்கும் AXIOM SPACE 


பிரிட்டிஷ் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின்படி, பாதிக்கப்பட்டவர், பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் வெளியுறவு அலுவலகத்திற்கு இந்த நிகழ்வைப் பற்றி புகாரளித்ததாகக் கூறினார். எனினும், கானுக்கு பாகிஸ்தான் இராணுவம் மற்றும் நிர்வாகத்தில் இருந்த பல வித தொடர்புகள் காரணமாக, பாகிஸ்தானில் எந்த காவல் நிலையத்திலும் இது குறித்து தான் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 


பெஷாவரில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் ஒரு அறையை இருவரும் பகிர்ந்துகொண்டதாகவும், அப்போது, ​​​​கான் அவருக்கு தூக்க மாத்திரையைக் கொடுத்தார் என்றும் அந்த நபர் கூறினார். அப்போது அவர் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 


கான் தன்னுடன் தகாத உறவு கொள்வதை உணர்ந்து விழித்தெழுந்த அந்த நபர், தான் அவரை தள்ளி விட்டு இந்த இழிச்செயலை நிறுத்துமாறு கூறியதாகவும் தெரிவித்தார். 


மேலும் படிக்க | இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது