கொரோனாவை விட கொடூரம்...? பரவும் மெர்ஸ் தொற்று - WHO எச்சரிக்கை!
MERS Covid Virus: மிகவும் ஆபத்தான தொற்று வகையான MERS-CoV வைரஸ் பாதிப்பு நேற்று அபுதாபியில் பதிவாகியுள்ளது.
MERS Covid Virus: உலகம் கொரோனா தொற்றுநோயில் இருந்து தற்போது வெளிவந்திருப்பதாக எண்ணி சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறதுய ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிக்கிறது.
அபுதாபியில் MERS-CoV என்ற மிகவும் ஆபத்தான தொற்றுவகையின் பாதிப்பு நேற்று (ஜூலை 24) பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் ஒருவருக்கு, Middle East Respiratory Syndrome - Coronavirus (MERS-CoV) என்ற கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கோவிட்-19 தொற்றை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த நபருடன் தொடர்பில் இருந்த 108 பேரின் பட்டியலை விரிவாக சரிபார்த்த போதிலும், WHO வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கான எந்த தொடர்பையும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் முக்கியமாக ஒட்டகம் போன்ற விலங்குகளிடம் இருந்து பரவுகிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட அந்த நபர், ஒட்டகங்களுடன் தொடர்பு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
மத்திய கிழக்கில் அதிகம் காணப்படும்
இந்க கொரோனா வைரஸ் (MERS-CoV) முதன்முதலில் 2012இல் சவுதி அரேபியாவில் கண்டறியப்பட்டது. இதுவரை, அல்ஜீரியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், சீனா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஈரான், இத்தாலி, மலேசியா, லெபன், ஜோர்டான், குவாயிலி, ஜோர்டன், கத்தார், கொரியா குடியரசு, சவுதி அரேபியா, தாய்லாந்து, துனிசியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 936 இறப்புகளுடன் மொத்தம் 2,605 வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன என்று WHO தெரிவித்துள்ளது.
எவ்வாறு பரவுகிறது?
இது விலங்குகள் மற்றும் மனிதர்களிடையே பரவக்கூடிய ஒரு ஜூடோனிக் வைரஸ் ஆகும். WHO தகவல்களின்படி, சவூதி அரேபியாவில் உள்ள மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட ட்ரோமெடரி ஒட்டகங்களுடன் பாதுகாப்பற்ற தொடர்பு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அறிகுறிகள்
காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை வைரஸின் அறிகுறிகளாகும். பல சந்தர்ப்பங்களில் இந்த நோய் நிமோனியாவை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | அஜித் தோவல் வாங் யீ சந்திப்பு... இணைந்து பணியாற்ற பரஸ்பர மரியாதை - புரிதல் அவசியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ