Netflix 200,000 சந்தாதாரர்களை இழந்த நிலையில், செவ்வாயன்று Netflix பங்குகள் மதிப்பு 20% குறைந்தது. ஒரு தசாப்தத்தில் முன்னணி ஸ்ட்ரீமிங் தொலைக்காட்சி சேவை நிறுவனம் தனது சந்தாதாரர்களை இழந்தது இதுவே முதல் முறை. செவ்வாயன்று வெளியிடப்பட்ட காலாண்டு வருவாய் அறிக்கையின்படி, ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2,00,000 என்ற அளவில் குறைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிறுவனம் கூறிய காரணம்


மாஸ்கோவின் உக்ரைன் படையெடுப்பின் காரணமாக ரஷ்யாவில் அதன் சேவை நிறுத்தப்பட்டதும் ஒரு காரணம் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 221.6 மில்லியன் சந்தாதாரர்களுடன் உள்ள நிறுவனமாக உள்ளது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் இருந்து சற்று குறைந்து அளவாகும்.


நெட்ஃபிக்ஸ் பங்குகள் வீழ்ச்சியடைந்தன


சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிறுவனத்தின் நிகர வருமானம் $1.6 பில்லியனாக இருந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் நிகர வருமானம் $1.7 பில்லியனாக இருந்தது. வருவாய் புள்ளிவிவரங்கள் வெளியான பிறகு, சந்தை வர்த்தகத்தில் நெட்ஃபிக்ஸ் பங்குகள் சுமார் 25 சதவீதம் சரிந்து $262 ஆக இருந்தது.


மேலும் படிக்க | Tips and Tricks: நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை எளிதாக ரத்து செய்யும் சுலப வழிமுறைகள் 


மற்றவர்களுடன் கணக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்கள்


நெட்ஃபிக்ஸ் ஒரு கடிதத்தில், 'நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக வருவாயை அதிகரிக்கவில்லை. 2020 இல் கோவிட் வந்த பிறகு, நிறுவனம் நிறைய பயன்களை அடைந்தது. 2021ல் அதிக பலன் கிடைக்கவில்லை. சுமார் 222 மில்லியன் குடும்பங்கள் அதன் சேவைக்காக பணம் செலுத்தும் அதே வேளையில், தொலைக்காட்சி ஸ்ட்ரீமிங் சேவைக்கு பணம் செலுத்தாத 100 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுடன் கணக்குகள் பகிரப்பட்டுள்ளன என்று ஸ்ட்ரீமிங் நிறுவனம் Netflix மதிப்பிட்டுள்ளது.


 


மேலும் படிக்க | Jio - Vi - Airtel: ₹299 பிரீபெய்ட் திட்டத்தில் சிறந்தது எது?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR