ஆத்தாடி! கடலில் குதித்த பாகிஸ்தான் நிருபர்... அதுவும் இதுக்காகவா? - ரொம்ப டூ மச்!
Viral Video: பாகிஸ்தானின் நடுத்தர வயது செய்தியாளர் போல் தோற்றமளிக்கும் நபர், `நேரடி ஒளிப்பரப்பில்` செய்த செயல் தான் பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
Pakistan Viral Video: தகவல் தொடர்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் எந்த அளவிற்கு முன்னேற்றம் கண்டுவிட்டது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல தேவையில்லை. தங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் முதல் உலக அளவிலான அத்தனை விஷயங்களை ஒரு நொடி பொழுதில் பாமர மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், தகவல் தொடர்பு முன்னேற்றியுள்ளது.
அதில் ஊடகத்திற்கு சிறப்பு பங்கு உள்ளது. குறிப்பாக, தொலைக்காட்சி, யூ-ட்யூப் ஊடகங்களை நேரலை காட்சிகள் மூலமாக செய்தியையும், தகவலையும் மக்களிடத்தில் கடத்தும் மிகப்பெரும் பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்றன. செய்தி ஊடகங்களின் மீது புகார்கள் எழுந்தாலும், அதன் பணியை யாராலும் மறுக்க இயலாது என்பது பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
போர், புயல், மழை, போராட்டம், கலவரம் என அனைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் களத்தில் செயல்பட்டு வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சாதரண மனிதன் செல்ல இயலாத இடங்களுக்கும் சென்று உண்மையை வெளிக்கொண்டு வருவது ஊடகத்தின் சீரிய பணியாகும். ஆனால், அதே வேளையில், சில செய்தியாளர்கள் அதிலும் அதிக ஆர்வங்கொண்டு சில விஷயங்களை நேரலையில் செய்வதையும் நாம் பாத்திருப்போம்.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ஒரு சமீபத்திய வீடியோ ஒன்று பெரும் நகைச்சுவை உள்ளடக்கத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வைரல் வீடியோவில், ஒரு நடுத்தர வயது செய்தியாளர் போல் தோற்றமளிக்கும், 'நேரடி ஒளிப்பரப்பில்' அவர் செய்த செயல் தான் பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.
மேலும் படிக்க | சுறா மீனை சுமந்து செல்லும் கடல் பருந்து... இணையவாசிகளை வியக்க வைத்த வீடியோ!
அவர் ஒரு கடலோர பகுதியில் நிலவும் வானிலை அறிக்கையை நேரலையில் வழங்கி வருகிறார். கடலின் ஆழம் பற்றி அதில் பேசி வந்தார். ஆச்சரியப்படும் விதமாக, சில நிமிடங்களில், அவர் தனது மைக்குடன் தண்ணீரில் குதித்து, கடலில் இருந்து தனது செய்தியை வழங்கினார். கடல் நீரின் ஆழத்தை காட்ட அவர் நீரில் குதித்ததாக நகைச்சுவையாக கூறப்படுகிறது. நீரில் குதித்தவுடன் அவர்,"தண்ணீர் மிகவும் ஆழமானது, அதற்கு அடிப்பகுதியே காணவில்லை" என்று குறிப்பிடுகிறார்.
கராச்சியில் உள்ள அப்துல் ரெஹ்மான் நியூஸில் இருந்து ஒளிப்பதிவாளர் தைமூர் கானுடன், அப்துல் ரெஹ்மான் கான் என்று அந்த வீடியோவில் கூறுகிறார். இருப்பினும், அந்த நபர் ஒரு தொழில்முறை செய்தியாளரா அல்லது பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக வீடியோவை உருவாக்கினாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நகைச்சுவையான சம்பவம், 2008இல் வைரலாகி புகழ் பெற்ற பாகிஸ்தானிய தொலைக்காட்சி நிருபரான சந்த் நவாப்பின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது என சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். சந்த் நவாப், கராச்சி ரயில் நிலையத்தில் ஈத் பண்டிகையின்போது ஏற்பட்ட குழப்பத்தைப் பற்றிப் தொலைக்காட்சி நேரலையில் சொல்லிக்கொண்டிருந்த போது, வழிப்போக்கர்களால் அடிக்கடி குறுக்கிடப்பட்டார். ஒரு நேரடி அறிக்கையின் போது அவரது பல குறுக்கீடுகளின் வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்ததால் அதுவும் அப்போது வைரலாகியது. மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்தது.
அந்த வைரல் வீடியோவால் ஈர்க்கப்பட்டு, இந்திய திரைப்பட இயக்குநர் கபீர் கானின் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' திரைப்படத்தில் சந்த் நவாப் பாத்திரத்தை வைத்திருந்தார். அதில் நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்திருந்தார். தற்போது வைரலாகியுள்ள வேடிக்கையான வீடியோ கணிசமான எண்ணிக்கையிலான கமெண்டுகளை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | சோகத்தில் விவசாயி.... வாரி அணைத்துக்கொண்ட மாடுகள்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ