அடேங்கப்பா..! இங்க ரூ.1000 அங்க ரூ.41000! மாஸ் தான்!
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கட்டிலை நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனம் ரூ.41,000க்கு விற்பனை செய்யும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து:- இந்தியாவில் பயன்படுத்தப்படும் கட்டிலை நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனம் ரூ.41,000க்கு விற்பனை செய்யும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தரமான பொருட்கள் அனைத்தும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இப்படிப்பட்ட இந்த தரமான இந்திய பொருட்கள், வெளிநாட்டில் அதிக ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதிரியான செயல் ஒன்று தற்போது நியூசிலாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் நடந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கயிற்று கட்டில் “இந்தியன் வின்டேஜ் பெட்” என்ற பெயரில் நியூசிலாந்து நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் வெறும் 1000 ரூபாய்க்கு வாங்கப்படும் இந்த கட்டில் இந்த நாட்டில் சுமார் 41000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், இதற்கு பெயர் தான் “அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக” என்று தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளனர். இதற்கு பதில் கமெண்ட் அளித்துள்ள இணைய வாசிகள் இது காலங்காலமாக நடந்து வருகிறது என வேதனை தெரிவித்தனர்.
ALSO READ நீரில்லா அணு உலையின் சோதனைகளைத் தொடங்கும் சீனா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR