காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு! ஆப்கன் நாட்டை சேர்ந்தவர் உயிரிழப்பு!
காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
காபூல் : காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து அந்நாடு பதற்றத்தின் பிடியில் சிக்கித்தவிக்கிறது. அங்குள்ள வெளிநாட்டினர் மட்டுமல்லாது உள்நாட்டினரும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினால் போதும் என்ற மன நிலையில் உள்ளனர். இதனால் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் தொடர்ந்து அலை மோதுகிறது. விமான நிலையத்துக்கு வெளியேயும் ஒரு குழப்பமான சூழ்நிலை நீடித்து கொண்டே வருகிறது.மேலும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் நாட்டை விட்டு தப்பினால் போதும் என்ற நிலையில், விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர் .
ALSO READ அஷ்ரப் கானி ஆப்கானை விட்டு ஓடியதன் காரணம் என்ன; அவரது சகோதரரின் முக்கிய பேட்டி..!!
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கும் அடையாளம் தெரியாத நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. இதில் ஜெர்மனி,அமெரிக்க படைகளும் இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஜெர்மனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காபூலில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ALSO READ தலிபான்களுடன் இணைந்து செயல்பட தயாராகியுள்ள அரசு..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe