துருக்கியில் 35 தீவிரவாதிகள் சுட்டு கொலை
துருக்கியில் ராணுவ தளத்திற்குள் நுழைய முயன்ற 35 தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் குர்தீஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற தீவிரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள். துருக்கியின் ஹக்காரியில் நேற்று நடந்த மோதலில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.