உலகின் மிக நீளமான விமான சேவையினை சிங்கபூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது புதுரக A350-900 விமானத்தினை இந்தாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த A350-900 ரக விமானமானது 11,160 மைல் தொலைவினை பயணிக்கும் என தெரிவித்துள்ளது. இந்த பயணத்தில் சுமார் 1800 வழிதடங்களை தொடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



தற்போது பயணித்து வரும் சிங்கப்பூர் - நியுவேர்க் விமானமானது... 19 மணி நேர பயணத்தில் 9521 மைல்களை பயணிக்கின்றது.


இதற்கு முன்னதாக குவாத்தர் விமானமானது 9032 மைல்களை 18 மணி நேரத்தில் பயணித்ததே அதிகபட்ச தூரமாக கருத்பட்டது.  தற்போது வரவிருக்கும் இந்த A350-900 சேவையானது இனி நெடுந்தூரம் பயணம் செய்யும் விமானங்கள் பட்டியலில் முதலிடம் பெறும் என தெரிகிறது.


இந்நிலையில் கடந்த வாரம் தனது A350-900 விமானத்தின் சோதனை ஓட்டத்தினை வெற்றிகரமாக முடித்துள்ளது. சிக்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது கூடுதலாக ஏழு A350-900 ரக விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.