eBay என்ற இ-காமர்ஸ் நிறுவனத்தில், அனல் பறந்துகொண்டிருந்த ஏலத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ஒரு பொருளை அந்நிறுவனம் பாதிலேயே நீக்கவிட்டது இணையத்தில் தற்போது பரபரப்பாகியுள்ளது. அந்த பொருள், ஒரு பெண் பிரபலத்தால் பயன்படுத்தப்பட்ட உள்ளாடை என்பதுதான் அந்த அதிர்ச்சிக்கான முக்கிய காரணம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த உள்ளாடை 100,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 87 லட்சம்) வரை ஏலம் கேட்கப்பட்ட நிலையில், திடீரென ஏலத்தில் இருந்து அந்த பொருள் நீக்கப்பட்டது. Latto என்று அழைக்கப்படும் பிரபல அமெரிக்க ராப்-பாடகி அலிசா மைக்கேல் ஸ்டீபனுக்கு சொந்தமான, அவரால் பயன்படுத்தப்பட்ட இரண்டு உள்ளாடைகள்தான் அது. 


24 வயதான அந்த பாடகி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான உள்ளாடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பேசுப்பொருளாகின. அதாவது, ஒரே உள்ளாடையை ஏன் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என நெட்டிசன் அவரை கலாய்த்தனர். சிறுத்தை புள்ளிகள் கொண்ட அந்த உள்ளாடைகள் குறித்த இந்த பதிவுக்கு அந்த பாடகி பதிலளித்திருந்தார்.


மேலும் படிக்க | துருக்கியில் மிகப்பெரும் பூகம்பம்: 300-க்கும் மேல் பலி ; 600-க்கும் மேல் காயம்



அதில்,"ஐய்யோ, பேன்டி (உள்ளாட்டை) போலீஸா" என நகைச்சுவையாகவும், அந்த ட்ரோலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அவர் பதிவிட்டார். மேலும், அதில் இருந்து ஒரு படி மேலே சென்று, eBay நிறுவனத்தில், தனது உள்ளாடைகளை விற்பனை செய்ய இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த விற்பனைக்கான பதிவில்,"Latto-வால் பயன்படுத்தப்பட்ட சிறுத்தை புள்ளிகள் கொண்ட உள்ளாடைகள். Latto அதிக முறை பயன்படுத்தியதாக பார்க்கப்பட்ட உள்ளாடைகள்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், இதனை விற்பதால் புது உள்ளாடைகள் வாங்க இது உதவும் எனவும் அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். 


மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் தெளிவாக விளக்கியிருந்தார். தன்னிடம் சிறுத்தை புள்ளிகள் இருப்பது போன்ற உள்ளாடைகள் அதிகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், ஒரு ஐந்து உள்ளாடைகளை புகைப்படம் எடுத்து, ஸ்டோரியாக பதிவிட்டு,"இதில் ஒரு ஜோடி உள்ளாடைகளை இன்று பயன்படுத்தி, மறுநாள் விற்க திட்டமிட்டுள்ளேன்" என பதிவிட்டிருந்தார். 


அவர், eBay தளத்தில் ஒரு ஜோடி உள்ளாடைகளை விற்பனையில் பட்டியலிட்டார். தொடர்ந்து, அது பட்டியலிட்ட அரைமணி நேரத்தில், 90 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏலம் கேட்கப்பட்டது. இதனை அடுத்து சில நிமிடங்களிலேயே eBay பட்டியிலிடப்பட்ட உள்ளாடையை நீக்கிவிட்டது. தன்னுடைய பழைய துணிகள் பாலிசி மூலம் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டது. 


பயன்படுத்திய உள்ளாடைகள், காலுறைகள் ஆகியவற்றை விறக் அனுமதி இல்லை. அவை சுத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ebay-இல் ப்ராக்கள் உள்ளாடையாக கருதப்படவில்லை. ஆரோக்கியமும், சுகாதாரமுமே முக்கியமானது என குறிப்பிட்டுள்ளது. 


மேலும் படிக்க | கேம் விளையாட போன் கொடுக்காதிங்க... ஒரே இரவில் ரூ. 80 ஆயிரம் செலவு செய்த சிறுவன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ