பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்ட பின்னர் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலத்த பனிப்பொழிவு மற்றும் இடைவிடாத மழையால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் இறந்துள்ளனர் மற்றும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக சாலை மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்து பலுசிஸ்தான் முற்றிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதனிடையே இந்த மாகாணத்தின் 7 மாவட்டங்களில் அவசரநிலை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. தகவல்களின்படி, மஸ்துங், கிலா அப்துல்லா, கெட்ச், சியாரத், ஹர்னாய் மற்றும் பிஷின் மாவட்டங்களில் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் (PDMA) ஞாயிற்றுக்கிழமை அவசரநிலையை அறிவித்தது. ஊடகங்களில் உரையாற்றிய பலூசிஸ்தான் முதல்வர் ஜாம் கமல் கான், ஆணையாளர் மற்றும் துணை ஆணையர் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடும் பனி மேத்தர்சாய் முதல் ஜிப் வரையிலான நெடுஞ்சாலையைத் தடுத்துள்ளதுடன், பல வாகனங்களை அங்கே சிக்கித் தவிக்க வைத்துள்ளது.


குவெட்டாவில் தொடர்ச்சியான பனிப்பொழிவு காரணமாக பல கச்சா வீடுகள் இடிந்து விழுந்து பலரும் இறந்துள்ளனர். பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு காரணமாக 14 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்ததாக 'டான்' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்த டஜன் கணக்கானவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக சிவில் மருத்துவமனை வட்டார வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நிகழ்ந்து வரும் கடும் பனிப்பொழிவு 20 ஆண்டுகால சாதனையை முறியடித்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.