இத்தாலியில் உள்ள இரவு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி 6 பேர் பலியாகினர். கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தாலியில் உள்ள காரினால்டோ நகரத்தில் உள்ள இரவு விடுதியில் நேற்று பிரபல ராப் இசை கலைஞரான எபஸ்தா-வின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுமார் ஆயிரம் பேருக்கு அதிகமானோர் கலந்துக் கொண்டனர். அந்த கூட்டத்தில் பேப்பர் ஸ்பிரே அடுத்ததாகவும், அதனால் தீ பிடித்துவிட்டது என கூட்டத்தில் செய்தி பரவியது. 


தங்கள் உயிரை காப்பற்றிக்கொள்ள நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் ஓட ஆரம்பித்தனர். இதனால் கூட்ட நெரிசிலில் சிக்கி சுமார் 6 பேர் பலியாகினர். அதில் ஐந்து பேர் குழந்தைகள் (மூன்று பெண் குழந்தை & இரண்டு ஆண் குழந்தை). கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதில் 10-க்கு மேற்ப்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. காயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 


 



இதுக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.