கொரோனாவை கட்டுப்படுத்தும் பாம்பின் விஷம்- ஆய்வாளர்கள் கன்டுபிடிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், ஜரரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவது, இதன் மூலம் தெரியவந்துள்ளதாக பிரேசில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலியா:- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்படி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில், ஜரரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவது, இதன் மூலம் தெரியவந்துள்ளதாக பிரேசில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. எனினும், தொடர்ந்து அடுத்தடுத்த அலைகளால் என்ன செய்வதென்று தெரியாமல் பல நாடுகளும் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்நிலையில், பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள், ஜரரகுசு பிட் வைபர் என்னும் பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர். மேலும், இந்த பாம்பின் விஷம், குரங்கின் உடலில் கொரோனா தொற்று பரவுவதை 75 சதவீதம் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்து உள்ளனர்.
இந்த ஆய்வை நடத்திய ரபேல் கைடோ என்ற விஞ்ஞானி, ஜரரகுசு பிட் வைபர் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு, கொரோனா வைரசில் உள்ள முக்கிய புரதத்தைக் கட்டுப்படுத்துவதை கண்டறிந்துள்ளதாகக் கூறியுள்ளார். அதே நேரத்தில் பாம்பின் விஷத்திலுள்ள மூலக்கூறு பெப்டைட் என்றும், அதை ஆய்வகத்தில் உருவாக்க முடியும் என்பதால், ஜரரகுசு பிட் வைபர் பாம்புகளை பிடிக்கவோ, வளர்க்கவோ தேவையில்லை எனவும் ரபேல் கைடோ தெரிவித்து உள்ளார். இதனிடையே புதிய உருமாறிய கொரோனா சி.1.2. வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாது என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ இது தெரிஞ்சா இனிமே முட்டைய ஃபிரிட்ஜ்-ல வைக்கவே மாட்டீங்க!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR