சந்தேகத்திற்கிடமான வகையில் வட கொரியாவின் எல்லையில் நுழைந்த தென்கொரியாவைச் சேர்ந்த நபரை, கடலில் வைத்தே விசாரணை நடத்திய பின்னர் வட கொரிய வீரர்கள் அவரை சுட்டுக் கொன்றனர். பின்னர் கொரோனா வைரஸ் (Corona Virus) அச்சத்தால், அவரது உடலில் எண்ணெய் ஊற்றி எரித்தனர் என்று சியோல் இராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு எல்லைத் தீவான இயோன்பியோங்கிற்கு அருகே ஒரு நபர் ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போனதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர் ஒரு லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்தார் என ஒரு இராணுவ அதிகாரி கூறினார்.


தென் கொரியாவின் (South Korea) யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, இந்த நபர் வட கொரியப் படைகளால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த ஒரு அதிகாரியால் படகில் இருந்து விசாரிக்கப்பட்டுள்ளார்.


"அவர் தண்ணீரில் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று இராணுவ அதிகாரி AFP இடம் கூறினார். "வட கொரிய வீரர்கள் அவரது உடலில் எண்ணெய் ஊற்றி தீ வைத்து தண்ணீரில் எரித்தனர்."


கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக அவர் உடல் எரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பியோங்யாங் அதன் எல்லைகளை மூடி அவசரநிலையை அறிவித்துள்ளது.


"இது வட கொரியாவின் (North Korea) கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக நாங்கள் மதிப்பிடுகிறோம்" என்று இராணுவ அதிகாரி AFP இடம் கூறினார்.


"உயர் அதிகாரத்தின் உத்தரவுக்குப் பின்னர் இந்த கொலை நடந்துள்ளது” என தென் கொரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி கூறப்படுகிறது.


சியோலின் (Seoul) பாதுகாப்பு அமைச்சகம் இந்த துப்பாக்கிச் சூட்டை "மூர்க்கத்தனமான செயல்" என்று கண்டனம் செய்தது.


ALSO READ: வட கொரியாவா வினோத கொரியாவா: Kim Jong Un ஆட்சியின் latest order என்ன தெரியுமா?


"இந்த சம்பவத்திற்கான அனைத்து பொறுப்பும் வட கொரியாவுக்கு உள்ளது என்று நாங்கள் வட கொரியாவை கடுமையாக எச்சரிக்கிறோம்," என்று தென் கொரியா கூறியது.


ஜூலை மாதம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்கு தப்பி ஓடிய ஒரு வட கொரிய நபர், மீண்டும் வட கொரியாவுக்கு திரும்ப முயன்றார். அவரது செயல், வட கொரியாவை எச்சரிக்கை நிலைக்குத் தள்ளியது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற எண்ணத்தில், எல்லை நகரமான கேசோங்கில் அதிகாரிகL கடும் லாக்டௌனை விதித்தனர்.


கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து நாட்டிற்குள் பரவுவதைத் தடுக்க வட கொரிய அதிகாரிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்து, எல்லையில் ஒரு "இடையக மண்டலத்தை" உருவாக்கியதாக அமெரிக்க படைகளின் கொரியா தளபதி ராபர்ட் ஆப்ராம்ஸ் கூறினார்.


வட கொரியாவின் சுகாதார முறைகள் மிகவும் மோசமாக உள்ளன. அங்கு கொரோனா தொற்று பரவினால், அவர்களால் அதை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியாது. சீனாவில் (China) தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவி இருந்தாலும், வட கொரியாவில் இன்னும் ஒருவர் கூட அதனால் பாதிக்கப்பட்டதாக அறிக்கைகள் வரவில்லை.


தொற்று பரவலைத் தடுக்க, ஜனவரி மாதம் பியோங்யாங் (Pyongyang) சீனாவுடனான தனது எல்லையை மூடியது. ஜூலை மாதம், அரசாங்கம் தனது அவசரகால நிலையை அதிகபட்ச நிலைக்கு உயர்த்தியதாக மாநில ஊடகங்கள் கூறின.


ALSO READ: வட கொரியாவில் கண்ணாமூச்சி ரே ரே Part 2: கிம்மின் சகோதரி எங்கே?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR