தென் கொரியாவில் திருமணம் குறித்த இளைஞர்களின் மனப்பான்மை மாறி வருவதால், 2021-ம் ஆண்டில் திருமணம் செய்துகொள்ளும் தென் கொரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதற்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம். தென் கொரியாவால் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள தென் கொரியாவில், திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,93,000 ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 9.8 சதவீதம் குறைவானதாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

10ம் ஆண்டுகளில் மிக குறைவான திருமணங்கள்


இந்த எண்ணிக்கை 1970க்குப் பிறகு மிகக் குறைவு யோன்ஹாப் நியூஸ் ஏஜென்சி அறிக்கையில் வெளியான தகவல்கள் கூறுகின்றன. தென் கொரியா இது தொடர்பான தரவுகளைத் தொகுக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து 10வது ஆண்டாக திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கொரோனா ஒழிந்து விட்டது என நினைப்பது மிகப்பெரிய தவறாக இருக்கும்: ஐநா


திருமணத்திலும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும் ஆர்வம் இல்லை


பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நல்ல வேலை கிடைக்காததால், தென் கொரிய இளைஞர்கள், டேட்டிங், திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெறுதல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். இது தவிர, கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக  பல பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின.


திருமணத்தின் சராசரி வயது 33 வயதை எட்டியது


சமீபத்திய தரவு தென் கொரிய ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த ஆண்டு 33.4 வயதை எட்டியதாக கூறுகிறது. முன்னதாக, மணமகளின் சராசரி திருமண வயது 31.1 ஆண்டாக இருந்ததாக கூறப்படுகிறது


விவாகரத்து வழக்குகளும் குறைவு


2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பெண்களை மணந்த தென் கொரியர்களின் எண்ணிக்கை 13,000 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 14.6 சதவீதம் குறைவானது. மேலும், நாட்டின் மொத்த திருமணங்களில் 6.8 சதவீதம் ஆகும். இதற்கிடையில், தென் கொரியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,02,000 ஐ எட்டியது, இது கடந்த ஆண்டை விட 4.5 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை பதிவு செய்துள்ளது.


திருமணமாகி 5 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை


நாட்டில் 18.8 சதவீத ஜோடிகளின் திருமணம் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீடித்தது. கூடுதலாக, 17.6% ஜோடிகள் திருமணமாகி 30 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆகின்றன. அதேசமயம், திருமணமான தம்பதிகளில் 17.1 சதவீதம் பேர் 5 முதல் 9 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.


மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR