இலங்கையில் பல இடங்களில் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்துவருகின்றன. பிரதான சாலைகள், ரயில் தடங்கள் ஆகியவற்றை மறித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. டயர்களை தீயிட்டு கொளுத்தி மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணம்,  கோதுமை மாவு, உணவு வகைகள் மற்றும் ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மக்கள் பிரதான சாலையில் இறங்கி கோஷமிட்டு, டயர்களை தீயிட்டு கொளுத்தி போராட்டங்களை நடத்திவருவதனால் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.


ரம்புக்கன, காலி, இரத்தினபுரி, கண்டி திகன, மாவனெல்ல, மகியங்கனை, மாத்தறை, மாத்தளை, அனுராதபுரம், அக்குரஸ்ஸ, சிலாபம், கடுகஸ்தோட்டை, தெல்தெனிய, பாணந்துறை, அவிசாவளை உக்வத்த, கேகாலை, ஜிந்தோட்ட, மாதம்பே, தியத்தலாவ, அழுத்கம, அப்புத்தளை, பண்டாரவளை, தம்புள்ளை, கொழும்பு கட்டுநாயக்க, நுவரெலியா, அட்டன், பேருவளை ஆகிய இடங்களில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


ரம்புக்கனை ரயில் சாலையை மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால், கொழும்பு பதுளை ரயில் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளன.


மேலும் படிக்க | Srilanka Crisis: அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள பிரதமர் ராஜபக்‌ஷ பரிந்துரை 


மேலும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக ரம்புக்கனை நகரில் உள்ள பல கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.


அவிசாவளை – கொழும்பு பிரதான சாலையில் கலர் லைட் சந்தி என அழைக்கப்படும் பிரதான சந்தியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


இந்த போராட்டத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அநுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்து பிரதான சாலையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், கண்டி – மகியங்கனை சாலை முற்றாக தடைப்பட்டுள்ள தெல்தெனிய நகரில் மற்றுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


மேலும் கொழும்பு – காலி பிரதான சாலையை மறித்து காலி நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்திற்கு இடையூறாக பஸ்கள் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மாத்தறை நகரிலும் இவ்வாறான போராட்டமொன்று நடந்து வருகின்றது.


மேலும் படிக்க | ஒரே நாளில் ரூ.75 உயர்ந்த டீசல் விலை...நெருக்கடியில் இலங்கை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR