இலங்கையின் முக்கிய தமிழ் பிரதிநிதிகள் பிரதமர் மோடிக்கு கடிதம்: விவரம் உள்ளே
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முக்கிய தமிழ் பிரதிநிதிகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை சரி செய்ய இந்தியா தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முக்கிய தமிழ் பிரதிநிதிகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை சரி செய்ய இந்தியா தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தமிழர் பிரச்சினைகளுக்கு நீண்டகால அரசியல் தீர்வு மற்றும் சர்ச்சைக்குரிய 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இந்தியா பேச வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி காலத்தில் 13வது சட்டத்திருத்தம் வந்தது
இந்தியா இலங்கை (Sri Lanka) இடையே, 1987ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக 13ஆவது திருத்தச் சட்டம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கான உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இதில் உள்ளன.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துதல் மற்றும் சமரசச் செயற்பாடுகள் மூலம் இலங்கையின் சிறுபான்மை தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், ஆளும் இலங்கை மக்கள் கட்சியின் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்) சிங்கள பெரும்பான்மை ஆதரவாளர்கள் மாகாண சபை முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பிரதமரிடம் கடிதம் அளித்துள்ளனர்
மூத்த தமிழ்த் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் குழுவினர் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவைச் சந்தித்துப் பிரதமர் மோடிக்கு (PM Modi) தாங்கள் எழுதிய கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மேலும் இரு குழுக்களும் இருந்தன. இவற்றில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Licence Fee: பிபிசியின் உரிமக் கட்டண விவகாரத்தில் இங்கிலாந்து அரசு முடிவெடுத்தது
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தனர்
தமிழ்ப் பிரஜைகளின் கேள்விக்கு அவ்வப்போது பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 'அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். கடந்த காலங்களில் இந்திய மற்றும் இலங்கைத் தலைவர்கள் பல வாக்குறுதிகளை அளித்துள்ளனர். 13வது திருத்தச் சட்டத்தில் பணியாற்றுவது உட்பட பல வாக்குறுதிகளை இந்தக் கடிதம் நினைவூட்டியுள்ளது.' என்றார் அவர்.
பிரிக்கப்படாத தேசம் என்ற கட்டமைப்பின் கீழ் சுயநிர்ணய உரிமையுடன் தமிழ் பேசும் மக்கள் அவர்களின் இயற்கை வாழ்விடங்களில் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக இந்தப் பணியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், நியாயமான மற்றும் நீண்ட கால தீர்வைத் தேடி இந்தியா காட்டும் உறுதியான அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்தியா இலங்கைக்கு நிதி உதவி செய்தது
இலங்கையில் ஏறக்குறைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு (Food Scarcity) ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு, உணவு இறக்குமதிக்காகவும், குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தவும், இந்தியா, 900 மில்லியன் டாலர்களை கொழும்புக்கு வழங்கியுள்ளது. இந்த நேரத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தக் கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது. பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதாகவும் இந்தியா செவ்வாயன்று அறிவித்துள்ளது.
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இருவரும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியாவின் திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR