வீழ்ந்திருக்கும் தேசத்தை கட்டியெழுப்புவோம் - ஆளுநர் ராகவன்!
வீழ்ந்திருக்கும் தேசத்தை மீளக் கட்டியெழுப்பவே தான் ஆளுநர் பொறுப்பு ஏற்றிருப்பதாக இலங்கையின் முதல் தமிழ் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்!
வீழ்ந்திருக்கும் தேசத்தை மீளக் கட்டியெழுப்பவே தான் ஆளுநர் பொறுப்பு ஏற்றிருப்பதாக இலங்கையின் முதல் தமிழ் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்!
இலங்கையின் வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்., இலங்கையில், வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையில் ஒரு பாலமாக தான் செயல்படபோவதாக தெரிவித்தார்.
மேலும் வீழ்ந்திருக்கும் தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றிருப்பதாகவும், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பெயர் பலகைகளில் இரண்டு மொழிகள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டாள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரி 7-ஆம் நாள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கை தமிழரான கலாநிதி சுரேன் ராகவன் வட மாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையில் தமிழர் ஒருவர் மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை ஆகும்.
இந்திய வம்சவாழியை சேர்ந்த இவர் கம்பாஹவில் பிறந்து, அரசியல் மற்றும் கல்வித்துறையில் பல பரிணாமங்களை பெற்றவர். அரசியல் ரீதியான பல சாணக்கியங்களை கொண்ட சுரேன், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முன்னாள் பணிப்பாளராக பணியாற்றியுளார்.
ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு முறை பெற்று சாதனை படைத்த இவர், பிரித்தானியா, கனடா போன்ற நாடுகளில் மேற்படிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், அந்நாடுகளின் பல விருதுகளையும் வென்றுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது தமிழர் ஒருவர் அரசின் முக்கிய பொறுப்பில் அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.