அதிபர் உரையாற்றியபோது சைக்கிளில் சுற்றி வந்த குழந்தை

சிலி நாட்டு அதிபர் பொதுமக்களிடையே உரையாற்றியபோது, சிறுவன் ஒருவன் சைக்கிளில் அவரை சுற்றி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சிலி நாட்டில் புதிய அரசியலமைப்பை ஆதரித்து வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்து அதிபர் கேப்ரியல் போரிக் உரையாற்றினார். அவர் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தபோது, சூப்பர்மேன் உடையணிந்த சிறுவன் ஒருவன் தனது சைக்கிளில் அவரை சுற்றி சுற்றி வந்தான்.
சைக்கிளில் அவரை சுற்றி வந்த சிறுவன், பின்பு சைக்கிளை நிறுத்திவிட்டு அவரது பேச்சை சிறிது நேரம் கேட்டு விட்டு மீண்டும் அவரை சுற்றி வருவது போல் இந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் 1.33 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அதிபர் கேப்ரியல் போரிக் முன்மொழிந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. 7.9 மில்லியன் மக்கள் புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கு எதிராகவும், 4.9 மில்லியன் மக்கள் இந்த மாற்றத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். 36 வயதான கேப்ரியல் போரிக், கடந்த மார்ச் மாதம் சிலி அதிபராகப் பொறுப்பேற்றார். இந்த வாக்கெடுப்பு தோல்வி அடைந்தது அவருக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஒரே இரவில் உலகின் 25வது பணக்காரர் ஆன நபர்... நடந்தது என்ன!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ