நாட்டின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை எதிர்க்கும் வகையில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் நாட்டின் தலைநகரான பிரேசிலியாவில் உள்ள அரசு கட்டிடங்களை சேதப்படுத்தியுள்ளனர். 'பாசிச தாக்குதல்' என்று அழைக்கப்படும் இந்த தாக்குதலில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் உச்ச நீதிமன்ற கட்டிடங்களை சேதப்படுத்தின. தங்கள் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராணுவத்தின் பாதுகாப்பு வளையங்களை உடைத்த ஆதரவாளர்கள்


அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், போல்சனாரோவின் ஆதரவாளர்கள் ராணுவம் அமைத்திருந்த பாதுகாப்பு வளையங்களை உடைத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து வெளிவரும் பல வீடியோக்களில், போல்சனாரோவின் ஆதரவாளர்களின் பெரும் கூட்டம் ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி பிரேசிலிய தேசியக் கொடியில் சூழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். அவர்களை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.


மேலும் படிக்க | திருமணம் கடந்த உறவுக்கு தடை! இந்தோனேஷியா செல்லும் காதலர்களுக்கு சிக்கல்?


200க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள் கைது


காவல் துறை அதிகாரிகள் குறைந்தது 200 கலவரக்காரர்களை கைது செய்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் அதிபர் மாளிகையைச் சுற்றியுள்ள சூழ்நிலை கட்டுக்குள் உள்ளது.


கலவரம் வெடித்த காரணம்


இடதுசாரித் தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா பிரேசிலில் அதிபராகப் பதவியேற்றாலும், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவும், அவரது ஆதரவாளர்கள் தங்கள் தோல்வியை ஏற்க தயாராக இல்லை. ஜனவரி 2003 முதல் டிசம்பர் 2010 வரை அதிபராக இருந்த லூலா, 31 அக்டோபர் 2022 அன்று நடந்த தேர்தலில் போல்சனாரோவை தோற்கடித்தார். அவர் பதவியேற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, நாட்டில் கலவரங்கள் வெடித்தன.


அரசாங்க ஆயுதங்களை கலவரக்காரர்கள் சூறையாடினர்


போல்சனாரோவின் ஆதரவாளர்கள் வீடுகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அரசாங்க ஆயுதங்களையும் திருடியுள்ளனர். தலைநகரில் வன்முறை பரவியதை அடுத்து, போல்சனாரோ ஞாயிற்றுக்கிழமை ஒரு ட்வீட்டில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று வலியுறுத்தினார். இதற்கிடையில், சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தலைநகர் பிரேசிலியாவுக்கு தேசிய காவலர்களை அனுப்ப லூலா அவசரகால அதிகாரத்தை அறிவித்தார்.


கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி 


பிரேசில் கலவரம் குறித்து கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் அரசு நிர்வாகத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அவர் ஒரு ட்வீட்டில், "பிரேசிலியாவில் அரசு அமைப்புகளுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலை செய்திகள் குறித்து ஆழ்ந்த கவலை. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும். பிரேசிலிய அதிகாரிகளுக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம்."


மேலும் படிக்க | அலிபாபாவை தொடர்ந்து Ant குழுமத்தையும் இழக்கும் Jack Ma; தொடரும் சீனாவின் அடக்குமுறை!


மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ