சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமின் குயின் தெருவில் உள்ள ஒரு வணிகவளாகத்தின் முன்பாக நேற்று ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு லாரி ஒன்றை ஒருவர் வேகமாக ஓட்டி வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியை மக்கள் கூட்டத்தை நோக்கி இயக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவ இடத்தை உடனடியாக முற்றுகையிட்ட போலீசார் அங்கிருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியின் ரெயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சுரங்க நடைபாதைகளும் மூடப்பட்டன. 


இதுபற்றி சுவீடனின் மேற்கு பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஸ்டிபான் லோபன் கூறுகையில், ‘‘சுவீடன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது பயங்கரவாதிகள் கைவரிசை என்பதை அனைத்து தகவல்களும் உறுதி செய்கின்றன’’ என்றார். 


பின்னர், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் உடனடியாக தலைநகர் திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போதுவரை  2 பேரை கைது செய்து அந்நாட்டு பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். தாக்குதலையடுத்து ஸ்வீடன் எல்லைப்பகுதிகளில்  பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.