சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐஎஸ் தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் அரசுப் படைக்கும் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களுக்கும் அடிக்கடி சண்டை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சண்டை கடந்த ஐந்து நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. அதாவது அரசு ஆதரவுப் படையினர் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 


இந்த தாக்குததால் கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரமான தாக்குதல் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது. 


பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று செல்வதற்காக சண்டை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி உள்ளது.


இந்நிலையில், சிரியாவில் ஒரு மாதம் வரை போர் நிறுத்தம் ஒப்பந்தம் கொண்டு வரவேண்டும் என்று ஐ.நா. சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த தீர்மானம் மீது தங்களுக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்றும், இந்த தீர்மானத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் எனவும் ரஷ்யா தெரிவிக்கப்பட்டுள்ளது.


குவைத்தும், சுவீடனும் முன் மொழிந்த இத் தீர்மானத்தின்படி 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும். தீர்மானம் நிறைவேறிய 72 மணி நேரம் கழித்து தீர்மானம் அமலுக்கு வரும்.