சர்வதேசங்களையும் புரட்டிப் போட்டு ஸ்தம்பிக்க வைத்திருக்கும் கோவிட் -19 தொற்றுநோய் பல்வேறு கவலைகளை எழுப்புகிறது. ஆனால், இந்த ஆபத்தான கோவிட் நோய் குறித்து சீனா போலி செய்திகளை பரப்பியதாக தைவான் குற்றம் சாட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து பேசிய தைவான் நாட்டு அதிகாரி ஒருவர், சமூக ஊடக தளங்களில் பரவி வரும் தவறான தகவல்களைத் தடுக்க நாடு பொது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


தொற்றுநோயை திறம்பட கையாண்டததற்காக தைவான் பாராட்டப்பவுகிறது. சீனாவின் வுஹானில் கொரோனா பாதிப்புத் தொடங்கியதில் இருந்தே, தைவான் தன் நாட்டில் தொற்று பரவாமல் கட்டுக்குள் வைத்திருந்தது.


Also Read | சற்றே வேகம் தணியும் கொரோனா; கடந்த 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா


ஆனால் கொரோனாவின் திரிபு மற்றும் பல வயதினரையும் பாதிக்கும் அச்சங்களுக்கு மத்தியில், தீவு நாடான தைவான் (Taiwan), பல கடும் உத்தரவுகளை வெளியிட்டுள்ளது பல பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன.


தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மும்முரமாக உள்ள தங்கள் நாட்டு மக்களின் நம்பிக்கையை குலைப்பதற்காக சீனா தந்திரமாக "அறிவாற்றல் போரை" பயன்படுத்துவதாக தைவான் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டியுள்ளது.


தைவானை தனது சொந்த தீவு என்று கூறிவரும் சீனா, அந்த பகுதியை தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேரார்வத்தில் இருக்கிறது.


Also Read | கொல்கத்தாவை கள்ளக்குறிச்சியாக மாற்றினால் கொரோனா ஏமாந்துவிடுமா?


சீனாவின் போலி பிரச்சாரம் மற்றும் தைவானுக்கு எதிரான தவறான தகவல்களை பரவச் செய்யும் அந்நாட்டின் உத்தியால், தங்கலுக்கு கணிசமான ஆபத்து இருப்பதாக 


தைவானின் உள்துறை இணையமைச்சர் சென் சுங்-யென் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.


 "போலி தகவல்களின் உள்ளடக்கங்களை எல்லோருக்கும் நாங்கள் தொடர்ந்து விளக்கி வருவதற்கான காரணம், அதில் கவனம் செலுத்துவதே ஆகும். இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி சரிசெய்ய   வேண்டும், அறிவாற்றல் போரால் தைவானின் சமுதாயம் பாதிக்கக்கூடாது" என்று சுங்-யென் கூறினார்.


Also Read | Black fungus தொற்று என்பது என்ன? அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது? 


சீனாவின் பிரச்சாரம் தொடர்பான உதாரணங்களை மேற்கோள் காட்டும் அதிகாரிகள், ஆன்லைன் அறிக்கைகளை சுட்டிக்காட்டுகின்றனர். தைவான் அதிபர் சாய் இங்-வென் சமீபத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தகவல்களை அரசாங்கம் மறைத்து வருவதாகவும் அந்த செய்தியில் இடம்பெற்றுள்ளது.


 "இது மிகவும் மோசமான போலி செய்தி என்று அனைவருக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.


தீவு நாட்டில் தொற்றுநோயின் நிலை குறித்து சீனா “குழப்பத்தை உருவாக்க” முயற்சிப்பதாக கூறப்படுகிறது. சீனாவின் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் “கற்பனை” என்று தைவான் விவகார அலுவலகம் கூறுகிறது.


தங்கள் நாட்டின் பிரச்சினைகளை மூடிமறைக்கும் சீன அரசாங்கத்தின் நோக்கத்தின் ஒரு பகுதியே இது என்று தைவான் நம்புகிறது.


Also Read | Cyber Attack: 45 லட்சம் ஏர் இந்தியா பயணிகளின் Credit Card உள்ளிட்ட விவரங்கள் திருட்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR