சீனாவில் போட்டோ எடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கம்பி எண்ணிய நபர்..!
தாய்வான் நாட்டை சேர்ந்த ஒருவர், சீன காவல் அதிகாரிகளை போட்டோ எடுத்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.
தாய்வான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், சீன அதிகாரிகளை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வான் நாட்டை சேர்ந்த தொழிலதிபர்..!
தாய்வான் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர், லீ மெங்-ஷு. இவர், 2019ஆம் ஆண்டில் சீனாவின் தென் பகுதியில் உள்ள ஷென்சென் எனும் நகருக்கு தொழில் சம்பந்தமாக வந்துள்ளார். அப்போது இவர் சீன போலீஸ் அதிகாரிகளை புகைப்படம் எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை வெளிநாட்டு உளவாளி என்று, சீனாவின் ரகசியங்களை திருட வந்தவர் என்றும் போலீசார் சந்தேகித்தனர். இவர் மீது எந்த குற்றமும் இல்லை என தெரிந்த பிறகு இவர், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன..?
தாய்வான் தொழிலதிபரான லீ மெங் ஷு, 2019ஆம் ஆண்டில் ஒரு டெக் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், தன் தொழில் சம்பந்தமாக சீனாவிற்கு வருடத்தில் இரண்டு முறை வந்து செல்வதுண்டு. 2019ஆம் ஆண்டு இவர் சீனாவிற்கு பயணம் செய்த போது ஹாங் காங்கில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடைப்பெற்று வந்துள்ளது. அப்போது கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன. சீனாவிற்கு செல்வதற்கு முன்பு லீ, ஹாங் காங்கிற்கு சென்றுள்ளார். அங்கு நடைப்பெற்ற ப்ரேட் மற்றும் கூட்டத்தினை அருகில் நின்று பார்த்துள்ளார். அங்கு போராட்டக்காரர்களால் இவர் கையில் கொடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வைத்திருந்தார். அதன் பிறகு, சீனாவின் ஷென்சென் பகுதிக்கு சென்றுள்ளார்.
மேலும் படிக்க | சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பெண்ணுக்கு தூக்கு! எச்சரிக்கும் அரசு
இவர் தனது ஹோட்டல் அறையில் இருந்து போட்டோக்களை எடுத்துள்ளார். இவர், சீனாவில் இருந்து கிளம்புவதற்காக விமான நிலையத்திற்கு செல்கையில் விமான நிலைய அதிகாரிகளுக்கு இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இவர் பையை அவர்கள் ஆராய்ந்த போது அதில் போராட்டக்காரர்கள் கொடுத்த துண்டு பிரசுரங்களும் இருந்துள்ளது. இதை பார்த்த அதிகாரிகள், இவர் குறித்த சிசிடிவி காட்சிகளை பார்கையில் இவர் தாய்வான் நாட்டிலிருந்து சீனாவிற்கு வந்திருந்தது தெரியவந்தது. ஹோட்டல் அறையில் இவர் எடுத்த புகைப்படத்திற்கு பின்புறம் காவல் அதிகாரிகள் இருந்துள்ளனர். இதை பார்த்த அதிகாரிகள் இவரை வெளிநாட்டு உளவாளி என நினைத்து போலீஸார் இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
72 நாட்கள் ஒரே ஹோட்டல் அறையில்..
லீ மெங்க் ஷுவை பிடித்த அதிகாரிகள் அவரை 72 நாட்களுக்கு ஒரு ஹோட்டல் அறையில் வைத்துள்ளனர். அங்கு அவருக்கு டிவி பார்க்கவோ, புத்தகம் அல்லது நாளிதழ்கள் படிக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. ஜன்னலை மூடியுள்ள திரை சீலையை விளக்க கூட அந்த அதிகாரிகள் விடவில்லை என அவர் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். இவரை 3 போலீசார் கண்காணித்துள்ளனர். இப்படியே இவர் 72 நாட்கள் ஒரு ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு இவர் குற்றத்தடுப்பு மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர், சீனாவின் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட குற்றத்திற்காக இந்த தண்டனையை பெற்றுள்ளார்.
தாய் நாட்டிற்கு திரும்புகிறார்:
இவர் மீது எந்த குற்றமும் இல்லை என உணர்ந்த அந்நாட்டு அதிகாரிகள் இவரை இறுதியில் விடுவித்திருக்கின்றனர். செய்யாத குற்றத்திற்காக கிட்டத்தட்ட 1,400 நாட்கள் (மூன்றரை ஆண்டுகள்) சிறை தண்டனை அனுபவித்ததை அடுத்து, லீ மெங்-ஷு தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து தன் தாய் நாட்டிற்கு செல்வதற்கு தயாராவதாக அவர் கூறியுள்ளார். டோக்கியோ விமான நிலையத்தில் இது குறித்து பேசியுள்ள அவர், இனி தான் குற்றம் சுமத்தப்பட்ட இடத்திற்கு போகவே மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | சன் கிளாஸ்-ஐ ஆட்டைய போட்ட அரசியல்வாதி! சிசிடிவியால் பறிபோன எம்.பி. பதவி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ