பஞ்சஷீர் பள்ளதாக்கில் கடும் போராட்டம்; தாலிபான்கள் கட்டுபாட்டில் சென்று விட்டதா..!!!
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள கைப்பற்றி விட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் அவர்களால் முறையாக புதிய அரசு குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் உள்ள போதிலும் அவர்களால் பஞ்சஷீரை கைப்பற்ற பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தான் உள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள கைப்பற்றி விட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் அவர்களால் முறையாக புதிய அரசு குறித்த அறிவிப்பை வெளியிட முடியவில்லை. அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் உள்ள போதிலும் அவர்களால் பஞ்சஷீரை கைப்பற்ற பெரும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை தான் உள்ளது.
இந்நிலையில், தலிபான்கள் பஞ்சஷீர் பகுதியை கைப்பற்றி விட்டதாகவும், போர் முடிவுக்கு வந்ததாகவும் அறிவித்துள்ளனர். தாலிபான் படைகள் கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கடைசி எதிர்ப்புக் கோட்டையான பஞ்ஜிரை கைப்பற்றின எனவும் பஞ்சஷிரில் உள்ள எட்டு மாவட்டங்களும் தங்கள் கட்டுபாட்டில் வந்து விட்டதாகவும் அறிவித்துள்ளனர். ஆனால், இதனை, பஞ்சஷீரில் போராடும் ஆப்கானின் (Afghanistan) தேசிய அளவிலான தாலிபான் எதிர்ப்பு வடக்கு முன்னணி (NRF) மறுத்துள்ளது.
ALSO READ | ஆப்கானை ஆள இருக்கும் முல்லா அப்துல் கானி பராதர்; யார் அந்த ‘பராதர்’..!!
NRF படை ட்விட்டர் பதிவு ஒன்றில், பஞ்சஷீரை ஆக்கிரமித்ததாக கூறும் தாலிபான்களின் கூற்று தவறானது. சண்டையைத் தொடர்ந்த மேற்கொள்ள தாலிபான்கள் எதிர்ப்பு படைகள் பள்ளத்தாக்கு முழுவதும் அனைத்து மூலோபாய நிலைகளிலும் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நீதி நிலைநாட்டப்பட்டு, சுதந்திரம் கிடைக்கும் வரை தலிபான்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஆப்கானிஸ்தானின் மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்’ என ட்வீட் செய்துள்ளது. முன்னதாக, பஞ்சஷீர் பகுதியில் நடந்து வரும் மோதல்களில் சுமார் 600 தாலிபான்கள் கொல்லப்பட்டதாக, எதிர்ப்பு படையினர் தெரிவித்தனர்.
ALSO READ | Afghanistan: ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறும் தாலிபான்; காரணம் என்ன..!!
இதற்கிடையில், தாலிபான்கள் எதிர்த்து போராடி வரும் வடக்கு கூட்டணி படையில் தலைமை தளபதியான சலே முகமது பஞ்சாஷீரில் நடந்த போரின் போது தலிபான் போராளிகளால் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு NRF அதிகாரியும், செய்தித் தொடர்பாளர் பாஹிம் தஷ்டியும் ஒரு நாளுக்கு முன்பு கொல்லப்பட்டார் எனவும் தகவல் வெளியானது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR