ஆப்கானிஸ்தானில் தொடரும் அவலம்: அடுத்த கட்டளையை வெளியிட்டது தாலிபான்
அல்-ஜசீராவின் அறிக்கையின்படி, புதிய தாலிபான் அரசாங்கம், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
காபூல்: ஏற்கனவே வீழ்ச்சியின் விளிம்பில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைக்கும் நடவடிக்கையாக, தாலிபான்கள் அந்நாட்டில் அன்னியச் செலாவணியைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதித்துள்ளனர்.
அல்-ஜசீராவின் அறிக்கையின்படி, புதிய தாலிபான் அரசாங்கம், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
"இஸ்லாமிய அமீரகம் (தாலிபான்) அனைத்து குடிமக்கள், கடைக்காரர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவுறுத்தல்... அனைத்து பரிவர்த்தனைகளையும் ஆப்கான் நாணயமான ஆப்கானினிஸில் நடத்தவும், வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது" என்று தாலிபான் (Taliban) செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தரவை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Bubble of freedom: ஆஃப்கன் பெண்களின் ஒரே மீட்டிங் பாயிண்ட்! இனியும் இருக்குமா?
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) சந்தைகளில் அமெரிக்க டாலர் பரிமாற்றத்திற்கான முக்கிய வழியாகவும், வெகுவாக புழக்கத்தில் இருக்கும் நாணயமாகவும் உள்ளது. எல்லையோரப் பகுதிகள் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் நாணயத்தை வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றன.
ஆகஸ்ட் 15 அன்று காபூலை தாலிபான் கைப்பற்றிய பிறகு, ஆப்கானிஸ்தானின் 9.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான அணுகலை, அமெரிக்கா, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவை தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் (Afghan People) உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி, ஏற்கனவே அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு தற்போது சர்வதேச ஆதரவும் இல்லை, தொடர்பும் இல்லை. மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தானில், பொது மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளனர்.
ALSO READ:அயோத்தி ராமஜென்ம பூமியில் கலந்த ஆப்கான் காபூல் நதி நீர்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR