காபூலில் தலிபான் தற்கொலைத் தாக்குதலில் 24 பேர் பலி; 40 பேர் காயம்.
காபூலின் மேற்கு பகுதியில் தலிபான் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஜிப் டானிஷ் கூறுகையில், குறைந்தபட்சம் 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 40 பேர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தலிபான் அமைப்பினர் பெரும்பாலும் ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.