காபுல்: ஆப்கானிஸ்தானின் வடக்கேயுள்ள மசார்-இ-ஷரிப் நகரில் அமைந்துள்ள ஜெர்மன் நாட்டுத் தூதரகம் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடை பெற்றது. in தா தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெர்மன் தூதரகத்தின் மீது வெடி குண்டு நிரப்பிய காரை மோதச்செய்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியதும் அருகாமையில் உள்ள கட்டிடங்களின் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 80 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஆப்கான் பாதுகாப்பு படை சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த சம்பவத்திற்கு ஜெர்மனி கண்டனம் தெரிவித்துள்ளது. 


கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் வடக்கே உள்ள குண்டூஸ் மாகாணத்தில் செயல்பட்டுவந்த தலிபான் முகாம்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பழி வாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.