அமெரிக்கா: டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கொலை
Mass Shooting in US: தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் மீண்டும் ஒரு பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தக் கொடூரச் செயலை செய்த நபர் 18 வயது மதிக்கத்தக்க நபர் ஆகும். மேலும் இந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சமபவம் குறித்த தகவலை டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | புடினின் மகள்கள் மீது தடைகள்..அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் அறிவிப்பு
முன்னதாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹூஸ்டன் பகுதியில் உள்ள சாண்டா ஃபே உயர்நிலைப் பள்ளியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் டெக்ஸாஸ் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ரைபிள் துப்பாக்கியுடன் பள்ளிக்குள் நுழைந்த அந்த வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர், ஒரு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கொல்லப்பட்டனர். அதேநேரம் 18 வயது நபரும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துள்ளார்.
ஜோ பைடன் இரங்கல்: துப்பாக்கிச் சூட்டில் இறந்த குழந்தைகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "இது செயல்பட வேண்டிய நேரம். துப்பாக்கிச் சட்டங்களைத் தாமதிப்பவர்களுக்கு/தடுப்பவர்களுக்கு இந்தக் கொடூரத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர்களிடம், ஒரு தேசமாக, நாம் எப்போது துப்பாக்கி லாபிக்கு எதிராக நிற்கப் போகிறோம் என்று கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளதார்.
காவல்துறைத் தலைவர் பீட் அரெடோண்டோவின் கூற்றுப்படி, இது டெக்சாஸின் உவால்டேவில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடந்தது. 600 குழந்தைகள் படிக்கின்றனர். தாக்குதல் நடத்தியவர் பள்ளியின் பழைய மாணவர் என்று கூறப்படுகிறது. சம்பவத்திற்கு முன் பள்ளிக்கு வெளியே காரை விட்டு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது இரு துப்பாக்கிகளுடன் பள்ளிக்குள் நுழைந்து சுடத் தொடங்கினார். துப்பாக்கிச் சூடு தொடங்கியவுடன், பள்ளியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தாக்குதல் நடத்திய நபருடன் மோதலில் ஈடுபட்டனர். இந்த என்கவுன்டரில் தாக்குதல் நடத்தியவர் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவில் 4 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்
இந்த சம்பவத்தையடுத்து, அந்நாட்டில் 4 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமெரிக்காவின் அனைத்து அரசு கட்டிடங்கள், ராணுவ நிலைகள், கடற்படை நிலையங்கள் மற்றும் தூதரகங்களில் 4 நாட்களுக்கு தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கனடாவில் பரவும் ஜாம்பி நோய்...சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை
மேலும் படிக்க | ஆயுளை நிர்ணயிக்கும் சனீஸ்வரர்: எந்த பாவகத்தில் சனி இருந்தால் தீர்க்காயுசு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR