அமெரிக்காவில் உள்ள ஒரு தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் அமைந்துள்ளது பாப்டிஸ்ட் சர்ச். அந்த சர்ச்சில் நேற்று ஏராளமானோர் கூடி பிராத்தனை செய்துகொண்டிருந்தனர்.


அப்போது தீடீரென மர்ம நபர் அங்கு நுழைந்து துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட தொடங்கினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்துவந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டு கொன்றனர்.


இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "பாதிக்கப்பட்ட சதர்லேண்டு பகுதி மக்களுடன் கடவுள் இருப்பார். இந்த நிகழ்வுகளை எஃப்.பி.ஐ கண்காணிக்கின்றன. ஜப்பானிலிருந்து நான் இதனை கண்காணிக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.