World Bizarre News: தாய்லாந்து நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் அவரது 24 வயது வளர்ப்பு மகனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக கணவன் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து அந்த பெண் தலைவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

45 வயதான பிரபாபோர்ன் சோய்வாட்கோ என்ற பெண்மணி அரசியல்வாதியாவார். தாய்லாந்தை உலுக்கிய இந்த சம்பவத்தில், சோய்வாட்கோ தனது மகனுடன் படுக்கையில் நிர்வாணமான நிலையில், அவரது கணவரால் கண்டுபிடிக்கப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 வயதான வளர்ப்பு மகன் ஃபிரா மஹா ஒரு துறவியாக அறியப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. 


கையும் களவுமாக பிடித்த கணவன்


இதுவரை வெளியான அறிக்கைகளின்படி, சோய்வாட்கோவின் கணவர், ஃபிரா மஹா உடனான தனது மனைவி கொண்டிருக்கும் உறவில் சந்தேகமடைந்ததாகவும், அவர்களை கையும் களவுமாக பிடிக்க ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக வாகனம் ஓட்டிச்சென்று கண்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. சோய்வாட்கோவின் கணவர், வளர்ப்பு மகனான மஹாவுடன் படுக்கையில் இருக்கும் தனது மனைவியை கையும் களவுமாக பிடிக்க பாங்காக்கில் இருந்து சுகோதை நகருக்கு காரில் சென்றார்.


மேலும் படிக்க | சீனாவில் கனமழையால் சாலை இடிந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலி.. 30 பேர் காயம்


இருவரையும் படுக்கையில் நிர்வாணமாக பார்த்தபோது, "நீங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?" என கோபத்தின் உச்சியில் அவரது கணவர் கேட்டுள்ளார்.  24 வயதான அந்த துறவியை தத்தெடுக்கும்படி தனது மனைவி தன்னை வற்புறுத்தியதாக கணவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். மிகவும் செல்வந்தரான அந்த கணவரிடம் கடந்தாண்டு அவரின் மனைவி, அந்த துறவியின் நிலை குறித்துதான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவனை நாம் தத்தெடுத்துக் கொள்வோமா" என கேட்டதாக கூறப்படுகிறது.


'என் மனைவியை மயக்கிவிட்டான்'


மேலும், இதுகுறித்து சோய்வாட்கோவின் கணவர் ஊடகங்களிடம் கூறுகையில்,"என் மனைவி எப்பொழுதும் மிகவும் அதீத மத நம்பிக்கை கொண்டவள். நாங்கள் கூட முதலில் உள்ளூர் கோவிலில் தான் சந்தித்தோம். ஆனால் சமீபத்தில் அவர் இளம் துறவியுடன் அதிக நேரம் செலவழிப்பதை நான் கவனித்தேன். கதவுகள் அடைப்பட்டிருந்தபோது, அவள் ஒரு துறவியின் அறைக்குள் செல்வதைக் கூட நான் பார்த்தேன். நான் நீண்ட நேரம் கதவைத் தட்டினேன். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. அவள் வெளியே வந்ததும் நான் அதுகுறித்து சந்தேகத்தை கேட்டேன். ஆனால் அவள் துறவியுடன் பிரார்த்தனை செய்ததாக பதில் அளித்தார். 


அந்த துறவியை பொறுத்தவரை, அவன் என் மனைவியை ஏமாற்றி அவளை மயக்கிவிட்டான் என்று நினைக்கிறேன். கடந்த ஆண்டு மனைவி அந்த துறவியின் நிலை குறித்து என்னிடம் மிகவும் வருத்தப்பட்டாள். எனவே நாங்கள் அவரை எங்கள் சொந்த மகனாக தத்தெடுக்க முடிவு செய்தோம்" என்றார். 


மனைவி கூறுவது என்ன?


மேலும் மனைவியின் நடத்தையை எப்படி கண்டறிந்தீர்கள் என்ற கேள்விக்கு,"அவள் தொலைபேசியில் பதிலளிக்காததால் நான் சீக்கிரம் வீட்டிற்கு வந்தேன். ஏதோ தவறு நடப்பதாக எனக்கு சந்தேகம் வந்தது. நான் அவர்களை ஒன்றாகக் கண்டபோது நான் மிகவும் கோபமடைந்தேன், எனக்கு மிகப்பெரிய அளவில் துரோகமிழைக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் அவளுக்கு தங்கமத்தை அள்ளி கொடுத்துள்ளேன், அவளுக்குப் பல பரிசுகளைக் கொடுத்திருக்கேன்" என்று கணவன் தனது வருத்தங்களை பதிவு செய்தார்.


இருப்பினும், பெண் அரசியல் தலைவரான பிரபாபோர்ன் சோய்வாட்கோ, தனது வளர்ப்பு மகனுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். "அப்போது நாங்கள் உடலுறவு கொள்ளவில்லை. எதுவும் நடக்கவில்லை, வீடியோவில் இருப்பது போல் இல்லை. அவருக்கு சில பிரச்சனைகள் இருந்தன, அதனால் நாங்கள் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தோம், பின்னர் நாங்கள் குளிக்கச் செல்ல இருந்தோம்" என்றார்.


மேலும் படிக்க | மாலத்தீவு செல்ல பிளானா... சுற்றுலா பயணிகள் மீது நடக்கும் தாக்குதல்கள்... எச்சரிக்கையா இருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ