புதுடில்லி: ஒசாமா பின்லேடன் (Osama bin Laden) பாகிஸ்தானில் இருக்கும் இடம் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்து கொள்ளவில்லை. பயங்கரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தான் மீதான நம்பிக்கையின்மை ஒரு காரணம் என்றால் அந்நாட்டின் முந்தைய அனுபவங்களை மனதில் வைத்து இந்த  முடிவு எடுக்கப்பட்டதாக, அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் சி.ஐ.ஏவின் முன்னாள் தலைவருமான லியோன் பனெட்டா (Leon Panetta) தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடன் அபோட்டாபாத்தில் உள்ள வளாகத்தில் இருப்பதை அறிந்த பாகிஸ்தானில் யாரும் இல்லை என்று நம்புவது மிகவும் கடினம் என்று எங்கள் இணை WION சேனலுக்கு அளித்த பேட்டியில் பனெட்டா கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒசாமா பின்லேடன், அமெரிக்காவால் தீவிரமாக தேடப்பட்ட பயங்கரவாதி, பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் அன்றைய தலைவர் பின்லேடன் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 மே மாதம் 2ஆம் தேதியன்று, அமெரிக்க கடற்படையின் SEAL (U.S. Navy SEAL team)  என்ற குழுவினர், அபோட்டாபாத்தில் நடத்திய ரகசிய அதிரடி நடவடிக்கையில் பின்லேடனை சுற்றிவளைத்து கொன்றது. இது பற்றி தனது நேர்காணலில் குறிப்பிட்ட பனெட்டா, "பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் பின்லேடன் இருப்பதாக எங்களுக்குத் தெரிந்தது" என்று கூறினார்.


அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) முன்னாள் தலைவர் பனெட்டா, ”பின்லேடன் தங்கியிருந்த வளாகம் மிகவும் பெரியது. ஒரு புறத்தில் 18 அடி உயரமும், மறுபுறம் 12 அடி உயரமும், முள்வேலிகளும் சூழ இருந்த வளாகத்தில் பின்லேடன் இருந்தது பாகிஸ்தானில் யாருக்கும் தெரியாது என்று நம்புவது கடினம்" என்று அவர் கூறினார்.


Read Also | Nepal: 5000 டாலர் health insurance இருந்தா இமயமலைக்கு போகலாம்...இல்லைன்னா No Entry


”பின்லேடன் பாகிஸ்தானில் இருப்பதை உறுதி செய்த பிறகு, அந்த தகவலை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளலாமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டிய சூழ்நிலை எழுந்தது.  பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் இருக்கும் இடம் குறித்த தகவல்கள் பகிரப்பட்டவுடன், அந்நாடு தகவலை கசியவிடும், பிறகு ஒசாமா பின்லேடன் மாயமாகி விடுவார் என்பாதால் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரகசியத் தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தார்” என்று முன்னாள் சி.ஐ.ஏ தலைவர் தெரிவித்தார். 


'மிகவும் வெளிப்படையாகச் சொல்வதானால், பாகிஸ்தான் மீதான அவநம்பிக்கை மற்றும் பயங்கரவாதி தப்பிவிடக்கூடாது என்ற கவலைகளின் அடிப்படையில் ஒசாமா இருக்கும் இடத்தை கண்டறிந்துவிட்டோம் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. எங்கள் அதிரடி நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களையும்   தெரிவிக்கவில்லை" என்று பனெட்டா தெரிவித்தார். 


"எங்களுடைய இந்த முடிவால் தான் நாங்கள் ஒசாமா பின்லேடனை நெருங்க முடிந்தது, எங்கள் பணியில் வெற்றி பெற முடிந்தது என்று நம்புகிறோம்" என்று Leon Panetta முத்தாய்ப்பாக அந்த நேர்காணலை முடித்தார்.


அமெரிக்கா தொடர்பான மற்றுமொரு செய்தி | இந்தியாவுடன் பெரிய ஒப்பந்தம் செய்து சீனாவுக்கு மரண அடி கொடுக்கும் அமெரிக்கா...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR