இந்தியா - சீனா LAC குறித்து ஜெர்மன் தூதர் கூறிய கருத்து; கடுப்பில் சீனா!
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன், இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவது சர்வதேச ஒழுங்கை மீறும் செயல் என்றும் அதை ஏற்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன், இந்திய எல்லையில் சீனா அத்துமீறுவது சர்வதேச ஒழுங்கை மீறும் செயல் என்றும் அதை ஏற்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஐரோப்பா அடைந்துள்ள கோபத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஜேர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன், அருணாச்சல பிரதேசம் மீதான சீனாவின் கருத்துக்கள் "அதிர்ச்சியூட்டுவதாக" விவரித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல், கடந்த 70 ஆண்டுகளில் உலகின் மிக மோசமான தாக்குதல் என்று விவரித்த அக்கர்மேன், இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்பதை இந்திய தரப்பும் நன்றாக புரிந்து கொண்டுள்ளது என நம்புவதாக கூறினார்.
உக்ரைன் நெருக்கடியைப் பொருத்தவரை இந்தியாவும் ஐரோப்பாவும் “ஒவ்வொரு விஷயத்திலும்” உடன்பட முடியாது. ஆனால் பிரச்சினை குறித்து இரு தரப்புக்கும் இடையே ஒரு புரிதல் உள்ளது, என்றார். அப்போது அவர், 'வடக்கு எல்லையில் இந்தியாவின் பிரச்னை குறித்து நாங்கள் அறிவோம். அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்று சீனா கூறுவது, எல்லையில் அத்துமீறல் என்பதோடு, அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்’ என்றார். இது சீனாவிற்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!
சீனாவின் எல்லையையும், உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதையும் இந்தியா வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்று ஜெர்மன் தூதர் கூறினார். உக்ரைன் மீதான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, 'சர்வதேச சட்டத்தை மீறுவதை இந்தியத் தரப்பு நன்றாக புரிந்து கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் சமீபத்திய வாக்கெடுப்பை ஜெர்மன் தூதர் வரவேற்றார். உக்ரைன் அதிபர் டிஜிட்டல் முறையில் உரையாற்ற அனுமதித்தது இந்தியாவின் நிலைப்பாட்டில் முன்னேற்றம் ஏற்படுள்ளது என்பதை காட்டியது என்றார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு என்பது ஜெர்மனிக்கும் இந்தியாவிற்கும் இடையே அடிக்கடி விவாதிக்கப்படும் விஷயம் என்றும், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற துறைகளில் "பன்மடங்கு தாக்கங்களை" கொண்டுள்ளது என்று அவர் கூறினார். ஜெர்மனிக்கான எரிசக்தி விநியோகத்தை நிறுத்தி ரஷ்யா விளையாடுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மீண்டும் ஆயுத சோதனை: 2 க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியது வட கொரியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ