ஜகார்த்தா: இந்தோனேசிய கிராமம் ஒன்றில் பெரிய மலைப்பாம்பு ஒன்றினை கொண்று அக்கிராமத்தை சேர்ந்த மனிதர் ஒருவர் சாப்பிட்ட விவகாரம் ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமத்ராவின் பட்டங் கன்சால் மாவட்டத்தில், பாமாயில் தோட்டம் ஒன்றில் ராட்சத மலைப்பாம்பு ஒன்றின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. அத்தோட்டத்தில் காவலாளி ராபர்ட் நபாபன் என்பவர் அப்பாம்பினை பிடித்துள்ளார்.


உள்ளூர் ஊடகங்களின் அறிக்கையின்படி அந்த ராட்சத பாம்பு 7.8 மீட்டர் நீளம் உடையது என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாம்பினை அவர் தனியாக பிடிக்கு முற்பட்டப் போது, அப்பாம்பு அவரை தாக்க முயற்சித்துள்ளது. பின்னர் சில கிராமவாசிகள் உதவியுடன் அவர் அந்த பாம்பினை பிடித்து கொன்றுள்ளார்.


இந்த சம்பவத்தில் காவலார் கடுமையான காயங்களுடன் உயிர் தப்பினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிராமவாசிகளுக்கு அப்பாம்பினை காட்சிக்கு வைத்தப்பின் அப்பாம்பினை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தின்றுள்ளார் அந்த காவலர்.