வைரலாகும் இங்கிலாந்து இளவரசி குழந்தையின் புகைப்படம்!
இங்கிலாந்து இளவரசிக்கு 3-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது..!
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - இளவரசி கேட் மிடில்டன் தம்பதியினருக்கு மூன்றவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் பிரசவ வலி காரணமாக கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்து பொதுமக்களும், இளவரசர்களும் என்ன குழந்தை பிறக்கும் என்பதில் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.
இந்நிலையில், இளவரசி கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரச குடும்பத்தின் புதுவரவு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். மேலும், அரச குடும்பத்தின் 3-வது வாரிசு குறித்த செய்தி தமக்கு ஆனந்தம் அளிப்பதாக இளவரசர் ஹாரி கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, தற்போது அவர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இளவரசரின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. வில்லியம் - மிடில்டன் தம்பதிக்கு ஏற்கனவே, 4 வயதில் ஜார்ஜ் என்ற மகனும், 2 வயதில் சார்லட் என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.