இலங்கையில் நடைப்பெற்ற தொடர் குண்டுவெடி தாக்குதலினை அடுத்து கொழுப்புவிற்கு வரும் சுற்றுலா பயனிகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலங்கையில் நடைப்பெற்ற தொடர் குண்டுவெடி தாக்குதலின் எதிரொலியாக அந்நாட்டிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயனிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 30% சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதத்தில் 50% வரையில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக சுமார் 750 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழப்பு சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது.


இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி விபுல குணதிலக தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10% பயண சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


சுற்றுலா பயணிகளின் வரவை மையாமாக கொண்டு இயங்கி வரும் நட்சத்திர விடுதிகள், சத்திரங்கள் பெரும் அளவு இழப்பு சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கலாம் என கூறப்படுகிறது. இலங்கையை பொருத்தவரையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலா தளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.


நாட்டின் பொருளாதா மூலமாக தனியார் நிறுவனங்கள் மற்றும் ஜவுளி துறையினை அடுத்து சுற்றுலா துறை மூன்றாம் இடம் வகிக்கின்றது. ஆண்டிற்கு சுமார் 4.4 பில்லியன் டாலர்கள் வரவு ஈட்டி தருகின்றது.


---ஈஸ்டர் குண்டுவெடிப்பு---


கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை கடந்த 21-ஆம் தேதி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.


ஈஸ்டர் கொண்டாட்டம் ஒருபுறம் இருக்க, கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம், ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி உள்பட பல இடங்களில் திடீர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது. 


உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் தொடர்பாக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இந்த கோர தாக்குதலில் 359-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்ரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.