பாகிஸ்தானில் ரயில் கிராசிங்கில் பஸ் மீது ரயில் மோதியதில் 20 பேர் பலி
ஆளில்லா ரயில் கிராசிங்கைக் கடக்க முயன்ற பயணிகள் பஸ் மீது ரயில் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60 பேர் மருத்துவமனையில் அனுமதி.
கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆளில்லா ரயில் கிராசிங்கைக் கடக்க முயன்ற பயணிகள் பஸ் மீது ரயில் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சுக்கூர் மாவட்டத்தின் ரோஹ்ரி பகுதியில் கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் செல்லும் பஸ் திறந்த ஆளில்லா ரயில் கிராசிங்கைக் கடந்து போது பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 20 பேர் இறந்துவிட்டதாக சுக்கூர் ஆணையர் ஷபிக் அகமது மெஹ்சர் உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அவர் கூறினார். ரோஹ்ரி மற்றும் சுக்கூரில் உள்ள மருத்துவமனைகளில் குறைந்தது காயமடைந்த 60 பேரை நாங்கள் அனுமதித்துள்ளோம் என்று மெஹ்சர் கூறினார்.
இந்த மோதல் மிகவும் பயங்கரமாக இருந்தது. ரயில் மோதியதில் பஸ் 3 துண்டுகளாக உடைந்தது. இது ஒரு "பயங்கரமான விபத்து" என்று சுக்கூர் போலீஸ் அதிகாரி ஜமீல் அகமது கூறினார். இந்த விபத்து மிகவும் கொடூரமாக இருந்தது. ரயில் பஸ்ஸை 150 முதல் 200 அடி வரை இழுத்துச் சென்றதாக அவர் கூறினார். சிந்து முதலமைச்சர் முராத் அலி ஷா இந்த சம்பவத்தை அறிந்து கொண்டு, அந்த பகுதிக்கு மீட்புக் குழுக்களை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு சுக்கூர் ஆணையருக்கு உத்தரவிட்டார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.