டிரம்ப் பாக்கிஸ்தான் மீது மீண்டும் தாக்குதலைத் தொடர்கிறார்; 1.3 பில்லியன் டாலர் உதவித் தொகையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவிப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்க அரசு கொடுக்க மறுத்தது. இதுதொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின் லேடன் பாகிஸ்தானில் இருந்த போதும் அந்நாட்டிற்கு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.


பாகிஸ்தானை தாங்கள் ஆதரித்து வந்ததாகவேக் கூறிய டிரம்ப், ஆனால் பாகிஸ்தான் தங்களுக்காக சிறிய விஷயத்தைக் கூட செய்யாததால் நிதி உதவி நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர் அமெரிக்க  உதவி செய்து வரும் நிலையில், பாக்கிஸ்தான் எங்களுக்கு உதவும் வரை தற்காலிகமாக நிதி உதவிகளை நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
  
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் செய்தது என்ன? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அளித்துவந்த நிதியுதவியை நிறுத்த உத்தரவிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.


இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை’ என்றார். நிம்மதியாக, அழகாக வாழ்வதைப்போல் நல்ல விஷயம் ஏதுவும் பாகிஸ்தானில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். எனவே தாம் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.