இஸ்ரேல் நாட்டின் தலைநகராக தற்போது ஜெருசலேம் இருக்கிறது, ஆனால் இது இதுவரை ஐநா அமைப்பாலோ, அமெரிக்காவாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இதன் காரணமாக அந்த நாடு நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு செய்து இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வெளியிட்டார். மேலும் இஸ்ரேலின் 'டெல் அவிவ்' என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்பபோவதாகவும் கூறியுள்ளார். 


இந்த அறிவிப்பால் சவுதி கொதிப்படைந்துள்ளது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு மாற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரபு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் டிரம்பை எச்சரித்துள்ளனர்.