வர்ஜீனியா: நவம்பர் 8-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும் தேர்தலில் போட்டி இடுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் டொனால்டு டிரம்பின் மருமகளான லாரா, அமெரிக்காவில் வர்ஜீனியாவில் உள்ள கோயிலில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.


டொனால்ட் டிரம்ப் இந்திய மக்கள் மீது பாசத்தை வைத்துள்ளார் என்று லாரா கூறினார். இந்திய கலாச்சாரத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் வெர்ஜினியாவில் உள்ள ராஜ்தானி கோவிலில் நுழையும் முன் தனது காலணிகளை வெளியே அகற்றினார்.