இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கபார்ட் அமெரிக்காவின் முதல் பெண் இந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.  இந்நிலையில், தற்போது துளசி கபார்ட் ஜனநாயக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்கள் 'போர் தூண்டி விடும் உயர மட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் இனத்துடன் இணைத்து, தங்களுக்குள் சண்டையிட்டு, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்குகிறார்கள் என்றும் துளசி கூறியுள்ளார். மற்ற ஜனநாயகக் கட்சியினரும் தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜோ பிடனும் அவரது அரசாங்கமும் நம்மை அணு ஆயுதப் போரை நோக்கித் தள்ளிவிடுவதாக துளசி கப்பார்ட் குற்றம் சாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுதந்திர எண்ணம் கொண்ட ஜனநாயகக் கட்சியினர் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று துளசி கப்பார்ட் கூறினார். துளசி, 'நான் இனி ஜனநாயகக் கட்சியில் இருக்க முடியாது. இந்தக் கட்சி இப்போது ஒரு உயர மட்ட வர்க்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மக்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் இனவாதமாக்கி மக்களை பிளவுபடுத்த வேலை செய்கிறார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டுகிறார்கள். அதிபர் ஜோ பிடன் மற்றும் ஜனநாயகக் கட்சியின் உயரடுக்கு பிரிவினர், நம்மை அணுஆயுதப் போரின் பிடியில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இது மிகவும் ஆபத்தானது. மூன்றாம் உலகப் போர் நடந்தால் உலகம் அழிந்துவிடும் என துளசி கப்பார்ட்  கூறினார்.


மேலும் படிக்க | தாயகத்தின் வேர்களை மறவாத மருத்துவர் உமா கவினி! படித்த கல்லூரிக்கு ₹20 கோடி நன்கொடை


துளசி கபார்ட் ஜனாதிபதி பதவிக்கு உரிமை கோரியுள்ளார்
துளசி கபார்ட் மேலும் கூறுகையில், 'இந்த மக்கள் சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்கள் மீது காவல்துறையின் அதிகாரத்தை காட்டுகிறார்கள். மக்களை காக்காமல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள் என்றார். ஜனநாயகக் கட்சியின் தலைவராக துளசி கப்பார்ட், 2013 முதல் 2021 வரை ஹவாயின் இரண்டாவது காங்கிரஸ் மாவட்டத்தின் பிரதிநிதியாக இருந்தார்.


2020 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியில் அதிபர் வேட்பாளராக  போட்டியிட துளசி கப்பார்ட் முயன்றார், ஆனால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. துள சி கப்பார்ட், ‘நாம் இருக்கும் கட்சி ஆதிக்கம் பெற்ற உயரடுக்கு பிரிவினருக்கானது; என்றும் சாமானியர்களுக்காக அல்ல என்றும் கூறியதாக ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது. மேலும், "ஜனநாயகக் கட்சியின் சித்தாந்தவாதிகளே, நம் நாட்டைக் கொண்டு செல்லும் திசையை உங்களாலும் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால், என்னுடன் சேர உங்களை அழைக்கிறேன்," என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க |  NRI டாக்டர் விவேக் மூர்த்திக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய மரியாதை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ