இஸ்தான்புல்: துருக்கியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை பேரழிவு 14 பேரை பழிவாங்கி உள்ளது மற்றும் 200 க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. பூகம்பத்தால் சுமார் 10 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கிழக்கு குரேங் மாகாணத்தில் அதிகபட்ச சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி சுமார் 20:55 மணிக்கு (17:55 GMT) ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பேரழிவு மற்றும் அவசரநிலை மேலாண்மை அதிபரின் கூற்றுப்படி, காயமடைந்த இருவரின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். 400 க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் இப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் (AFAD) படி, பூகம்பத்தின் போது 60 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. துருக்கியின் அண்டை நாடுகளான ஈராக், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலும் பூகம்ப நடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நாடுகளில் இழப்பு பற்றிய செய்தி எதுவும் வெளியாகவில்லை.


துருக்கியில் அவ்வப்போது பூகம்பங்கள் ஏற்படுவது வழக்கம். 1999 ல் மேற்கு நகரமான இஸ்மிட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 17,000 பேர் இறந்தனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.