துருக்கியின் சிஸ்ரேவில் வன்முறையை அடக்கும் சிறப்பு படைப்பிரிவின் தலைமையகத்தை குறிவைத்து குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கு அதிகமான பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது. 


இச்சம்பவ புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் துருக்கி பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.