துபாய் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட தயாராக இருந்துள்ளன. 5 நிமிட இடைவெளியில் புறப்பட இருந்த இரண்டு விமானங்களுக்கும் ஒரே ஓடு பாதை ஒதுக்கப்பட்டிருந்துள்ளது. விமானத்தின் பயணங்கள் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்களும் செல்ல இருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து, உடனடியாக ஒரு விமானத்தின் பயணத்தை நிறுத்துமாறு விமான ஓட்டிக்கு அறிவுறுத்தியுள்ளனர். உடனடியாக அவரும் விமானத்தை பத்திரமாக நிறுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | இது என்ன கொடுமை!! உலோகப் பெட்டிகளில் தங்கவைக்கப்படும் சீன மக்கள்: வைரல் வீடியோ


இது குறித்து பேசிய அதிகாரிகள், துபாய் விமான நிலையத்தில் ஏற்பட இருந்த மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பேசும்போது, அரபு எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK-524 என்ற விமானம் ஹைதராபாத்துக்கு புறப்பட தயாராக இருந்தது. அது புறப்பட வேண்டிய நேரம் 9.45 மணி. அதே நிறுவனத்தின் மற்றொரு விமானமான EK-568, 5 நிமிட இடைவெளியில் பெங்களுருக்கு புறப்பட இருந்தது. 



துபாய் - ஹைதராபாத் விமானம் டேக் ஆஃப் ஆக அறிவுறுத்தப்பட்டவுடன், மிக வேகமாக 30R என்ற ஓடுபாதைக்கு சென்றது. அப்போது, அந்த ஓடுபாதையில் ஏற்கனவே பெங்களுருவுக்கு செல்ல இருந்த விமானம் இருந்ததை அறிந்த அதிகாரிகள், உடனடியாக ஹைதராபாத் விமானத்தின் டேக்ஆப்-ஐ நிறுத்துமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து, அந்த விமானம் வேறு பாதைக்கு சென்று நிறுத்தப்பட்டது. அதிகாரிகளின் தக்க சமயத்தில் எடுத்த நடவடிக்கையால் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரும் பாதுகாப்பட்டதாக அவர் கூறினார். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


ALSO READ | தடுப்பூசி கட்டாயம் என்கிறார் ‘ ஜோ பைடன்’; தேவையில்லை என்கிறது உச்ச நீதிமன்றம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR